அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்
தருமபுரி, ஏப்.21- இந்தியாவிற்கு வரும் அமெ ரிக்க துணை ஜனாதிபதி வரு கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவ சாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சுதந்திர வர்த்தகம் என்ற பெய ரால் வேளாண்மை, பால் வளம், மீன்வளத்தை சூறையாட அனு மதிக்கக்கூடாது. அமெரிக்கா பொருட்களின் சந்தையாக இந் தியா நாட்டை மாற்ற முயற்சிக்கும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்ஸே திரும்பிச் செல்ல வேண்டும், என வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.குமார் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், துணைச்செயலாளர்கள் ஏ.நேரு, ஆ.ஜீவானந்தம், துணைத்தலை வர்கள் எஸ்.தீர்த்தகிரி, கே.அன்பு மற்றும் நிர்வாகிகள் ஆர்.சின்ன சாமி, பி.ரவி, மாது, முருகன் உட் பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் வட்டத் தலைவர் என்.ஈஸ்வரன் தலைமை வகித் தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.அன்பழகன், மாவட்டச் செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, பால் உற் பத்தியாளர் சங்க மாவட்டச் செய லாளர் பி.அரியாக்கவுண்டர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.மணி முத்து, விவசாயிகள் சங்க ஒன் றிய நிர்வாகிகள் சீனிவாசன், சரவ ணன், கே.மாது, எம்.ரத்தினவேல், தம்பி (எ) அயந்துரை, மோகன், துரைசாமி, முருகன், சின்னமூப் பன், மகேஸ்வரி, சேகர் உட்பட திர ளான விவசாயிகள் கலந்து கொண் டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனு சாமி தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட துணைச்செய லாளர் பி.சடையப்பன், தாலுகா தலைவர் குப்புசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சிவக்குமார், மாதர் சங்க நிர்வாகி மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.