tamilnadu

img

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம்

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம்

உதகை, மார்ச் 1- கூடலூரில், ஓய்வூதியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் நடை பெற்ற கருத்தரங்கங்கில் திரளா னோர் கலந்து கொண்டனர். மத்திய, மாநில மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில், “இன்றைய சூழ லில் மூத்த குடிமக்களுக்கான சலுகை களும் திட்டங்களும்” என்ற தலைப் பில் கருத்தரங்கம் சனியன்று நடை பெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரி லுள்ள அரசு வருவாய்த்துறை அலுவ லர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற  இந்நிகழ்விற்கு, கூட்டமைப்பின் தலைவர் ஜி.வர்கீஸ் தலைமை வகித் தார். கூட்டமைப்பின் செயலாளர் கோட்பிரே மேத்யூ வரவேற்றார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க  மாவட்டத் தலைவர் ஆர்.குமார்  துவக்கவுரையாற்றினார். ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி மற்றும் பட்டத் தாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் பி.பத்ம நாதன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் கருணாநிதி,  பட்டதாரி ஆசிரியர் சங்க செயலா ளர் செந்தில்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சிவப் பெருமாள், விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் என்.வாசு, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டச் செய லாளர் இரா.விஷ்ணுதாசன், ஓய்வூதி யர் சங்க முன்னாள் துணைத்தலை வர் எஸ்.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியர் சங்க துணை  பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா  கருத்துரையாற்றினார். முடிவில், கூட்டமைப்பின் பொருளாளர் எஸ்.காளிமுத்து நன்றி கூறினார்.