tamilnadu

img

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது....  

தில்லி 
உலகை மிரட்டி வரும் கொரோனா என்னும் கொடூர வைரஸ் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இதில் அதிகம் பாதித்தது அமெரிக்கா தான். அந்த நாட்டுடன் எந்த நாடும் போட்டி போட முடியாத அளவிற்கு அமெரிக்கா உருக்குலைந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு 11 லட்சத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கை 64 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், உலகில் இதுவரை 33 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரமாக உள்ள நிலையில், கொரோனா பரவல் அச்சத்தில் உள்ள மக்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் செய்தி குணமடைந்தவர்கள் விபரம் தான். உலகில் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்கா 1.55 லட்சம் பேரையும், ஸ்பெயின் 1.37 பேரையும் குணமடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     
 

;