districts

img

செங்கொடி ஏற்றி பாட்டாளிகள் தினம் கொண்டாட்டம்

தருமபுரி, மே 2- நாமக்கல், தருமபுரி மாவட்டங்க ளில் கிளைகள் தோறும் செங்கொடி யினை ஏற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்து. மே 1 தொழிலாளர் தினத்தை முன் னிட்டு, உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் மே தின கொடியேற்று விழா  தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் நடைபெற்றது. செங்கொடிபுரத் தில் நடைபெற்ற மே தின விழாவில், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. குமார் கொடியேற்றி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, எஸ்.கிரைஸாமேரி, நகரச் செயலாளர் சி.முரளி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், கே.பூபதி, நிர்மலாராணி, மீனாட்சி, கே. சுசிலா, சுபா, தமிழ்மணி, ஏசுதாஸ் உட் பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று தருமபுரி ஒன்றியத்தில் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் என்.கந்த சாமி தலைமையில் மே தின விழா  கொண்டாடப்பட்டது. பாப்பிரெட்டிப் பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட் டச் செயலாளர் தி.வ.தனுசன் தலைமை வகித்தார். இதில் மாவட்டக்குழு உறுப் பினர் சி.வஞ்சி, தீர்த்தகிரி, பாவே.குப்பு சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று அரூரில் வட்டச் செயலா ளர் பி.குமார், பாலக்கோட்டில் வட்டச் செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன், காரி மங்கலத்தில் ஒன்றியச் செயலாளர் பி. ஜெயராமன், மொரப்பூரில் ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், நல்லம்பள்ளி யில் ஒன்றியச் செயலாளர் சின்னராஜ் ஆகியோர் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது. மே தினப் பேரணி சிஐடியு, ஏஐடியுசி சார்பில் மே தினப் பேரணி தருமபுரி வேல் பால் டிப்போ  அருகே துவங்கியது. முக்கிய கடைவீதி கள் வழியாக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் வந்ததடைந்தது. இதைய டுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சி.நாகரா சன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் பி. முருகன் ஆகியோர் தலைமை வகித்த னர். சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் ஜி.நாகராஜன் வரவேற்றார். சிஐ டியு மாநில துணைத்தலைவர் டி.உதய குமார், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி, ஏஐசிசிடியு மாநில பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செய லாளர் ஏ.மணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.மாதேஸ்வரன் ஆகி யோர் சிறப்புறையாற்றினர். முடிவில், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளர் ஏ. முருகன் நன்றி கூறினார். நாமக்கல் இதேபோன்று சிஐடியு, ஏஐடியுசி நாமக்கல் மாவட்டக்குழுக்கள் சார்பில், மே தினப் பேரணி திருச்செங்கோடு தேர் நிலை அருகே இருந்து துவங்கி யது. முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேர் நிலை அருகே நிறைவு பெற்றது. இதன்பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட் டத் தலைவர் ஜெயராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் அசோகன் ஆகி யோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஏ.பாஸ்கர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இதில்  ஏராளமான தொழிற்சங்க தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று நாமக்கல், பள்ளிபாளை யம், ராசிபுரம், குமாரபாளையம், பர மத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங் கங்கள் சார்பில் மே தினம் கொண்டா டப்பட்டது.

;