districts

img

பிற்போக்குத்தனமான சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம்

சென்னை, மே 2- பிற்போக்குத்தனமான பாசிச சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப் போம் என்று வடசென்னை யில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் அறைகூவல் விடுத்தார். சிஐடியு ஏஐடியுசி வடசென்னை மாவட்டம் சார்பில் 138ஆவது மே தின பேரணி பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பில்   புதனன்று (மே1)நடை பெற்றது. ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஏ.அருள் தலைமை தாங்கி னார். இதில் கலந்து கொண்டு  அ.சவுந்தரராசன் பேசுகை யில், தொழிற்சங்கங்கள் தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் வேண்டும் என்று கோரிக்கை வைக் கின்றன. ஆனால் முதலாளி களுக்கு தேவைக்கேற்ற குறைந்தபட்ச லாபம் என்று  இருக்கிறதா என்றால் இல்லை. குறைந்தபட்ச லாபம் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அப்போது தான் அந்த உபரி லாபம்  கல்வி, சுகாதாரம் என பல  வகைகளில் சமூகத்திற்கு வரும். அதை உறுதிப்படுத்த  வேண்டும் என்றால் தொழி லாளி வர்க்க ஆட்சி அமைய  வேண்டும் என்றார். போராட்டங்கள் வீண்போகவில்லை கடந்த 75 ஆண்டுகளுக் கும் மேலாக வருமான ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க  வேண்டும் என்று இடசாரி  கட்சிகள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக் கின்றன. இதுவரை எந்த  அரசியல் கட்சிகளும் அது குறித்து கண்டுகொள்ள வில்லை. ஆனால் இப்போது  வருமான ஏற்றத்தாழ்வு களை முன்பு போல் கடந்து போய்விட முடியாது என்பதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உணரத்  தொடங்கியுள்ளன. இப்போது பழைய ஓய்வூதி யத் திட்டம் அமல்படுத்தப் படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனவே நம்முடைய போராட்டங்கள் எதுவும் வீண் போக வில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வெறுப்பு அரசியல்  இவற்றையெல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான் மோடி வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் இந்து இஸ்லா மியர்களிடையே கல வரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய நினைக்கிறார்.  சிந்தாந்த எதிர்ப்பு பாஜகவின் பெரும்பான் மைவாதம் மிகவும் ஆபத்தானது.இந்தியாவில் சட்டத்திற்கு முன். நீதி மன்றத்திற்கு முன் அனைவரும் சமம். ஆனால்  பாஜக, ஆர்.எஸ்.எஸ்.  எல்லோரும் சமம் என்பதை  எப்போதும் ஏற்றுக் கொண்ட தில்லை. சமுதாயத்தில் அனைவரும் சமம் என்று ஏற்றுக் கொள்ளாதவர்கள், ஆட்சிக்கு முன் அனைவரும் சமம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.   இந்தியா முன்னேற வேண்டும் என்றால், அனை வரும் வறுமை இல்லாமல் வாழ வேண்டும் என்றால் உழைப்பு சுரண்டலுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்றால், வருமான ஏற்றத் தாழ்வு குறைய வேண்டும் என்றால், மக்கள் ஒற்றுமை யாக வாழ வேண்டும் என்றால் தேர்தலில் பாஜக  தோல்வி அடைந்தால் மட்டும் போதாது. அவர் களின் பிற்போக்குத் தனமான சித்தாந்தம் ஒழிக்கப்பட வேண்டும்.  அதற்கான போராட்டத்தை யும் நாம் தொடர்ந்து முன் னெடுக்க வேண்டும் என்றும்  அவர் கேட்டுக் கொண்டார். ஏஐடியுசி மாநில செயற் குழு உறுப்பினர் க.சந்தா னம் பேசுகையில், தொழி லாளர்களின் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சு குடித்துக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு, அவர்க ளுக்கு துணைபோகும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.சிற்கும் இடதுசாரிகளுக்கும் இடையே நடக்கும் சித்தாந்த யுத்தத்தில் பாசிச வலதுசாரி சக்திகளை மண்ணோடு மண்ணாக வீழ்த்துவோம் என இந்த மே நாளில் சபதமேற்போம் என்றார். இதில் சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் சு.லெனின் சுந்தர், எம்.எஸ்.மூர்த்தி, வி.குப்புசாமி, கே.சுந்தரம், ஆர்.ஜெயராமன், ஆர். மணிமேகலை, வி.பெரு மாள்சாமி, ஜி.ரேணுகா தேவி, ஜெ.லட்சுமி ஆகியோ ரும் பேசினர். முன்னதாக வி.செல்வராஜ் வரவேற்றார். வி.ஜெயகோபால் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் ஆர்.லோகநாதன், பி.லூர்து சாமி, என்.ஆனந்தன், எஸ்.வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஓட்டேரி காவல் நிலையத்தில் இருந்து பேண்டு வாத்தியம் முழங்க பேரணி துவங்கி புளியந்தோப்பு  டிகாஸ்டர் சாலையில் நிறைவு பெற்றது.

ஸ்விகி,சொமேட்டோ தொழிலாளர்களுக்கு  சட்டம் பொருந்தாதாம் 

‘‘வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. தொழிலாளி என்ற அந்தஸ்தே இல்லாத பல கோடி ஜிக் (ஸ்விகி, சொமேட்டோ) தொழிலாளர்கள் ஒருபுறம். அவர்களை தொழிலாளர்களாக அங்கீகரியுங்கள் என்றால் அதற்கு முதலாளியே கிடையாது, வெறும் செயலி தான் என்றும், அவர்களுக்கு எந்த சட்டமும் பொருந்தாது என்று கூறுகிறார்கள். ஐடி உள்ளிட்ட எந்த நிறுவனங்களிலும் பணி பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது’’. 

;