tamilnadu

img

ஐரோப்பா கண்டத்தில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை...

லண்டன் 
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஆசியக் கண்டத்தில் தனது ஆட்டத்தைத் துவங்கினாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஐரோப்பா கண்டத்தில் தான். ஐரோப்பா கண்டத்தில் கொரோனா முதலில் இத்தாலியில் காலடி வைத்தது. அடுத்த ஒரே வாரத்தில் பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற பெரிய பெரிய  நாடுகளில் கடும் சேதாரத்தை ஏற்படுத்தியது.

தற்போதைய நிலையில் குட்டி நாடுகளான சுவிஸ், போர்ச்சுக்கல், பெல்ஜியம் போன்ற நாடுகளையும் புரட்டி வருகிறது. வளமிக்க ஐரோப்பா கண்டத்தில் கொரோனவால் அதிக சேதாரத்தைச் சந்தித்தது இத்தாலி,ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் மட்டும் தான். மேலும் கொரோனா பாதிப்பில் ஸ்பெயின் (1,84,948) முதலிடத்திலும், பலி எண்ணிக்கையில் இத்தாலி (22,170) முதலிடத்திலும் உள்ளது. 

இந்நிலையில் ஐரோப்பாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை அங்கு 92 ஆயிரத்து 708 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு 10 லட்சத்து 24 ஆயிரத்து 432 ஆக உள்ளது. குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் இத்தாலி கொரோனவிலிருந்து ஓரளவு மீண்டுள்ள நிலையில், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் தான் திணறி வருகிறது.   
 

;