world

img

அதிகரிக்கும் சமூக - பொருளாதார சவால்கள்

நைரோபி,மே10- உலகப் பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் ஆகியவற்றில் உருவாகியுள்ள சவால்களை  தீர்ப்பதற்கும்  அதற்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காகவும் ஐ.நா சிவில் சமூக அமைப்பின்  69 ஆவது மாநாடு கென்ய தலைநக ரான நைரோபியில் துவங்கியுள்ளது.    உலக நாடுகளுக்கு இடையே நிலையான முன் னேற்றம் கொண்ட  எதிர்காலத்தை  உருவாக்குவது என்ற தலைப்பின் கீழ் இம்மாநாடு இரண்டு நாள் நடைபெறுகிறது.இம்மாநாட்டில்   ஐ.நா அதிகாரி கள்,  சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை மற்றும் சிந்தனைக் குழுக்கள் சார்பில்  2,000 க்கும் மேற்பட்ட  நபர்கள் பங்கேற்கின்றனர். உலகளவில் நிலவி வரும் பெரும் அரசியல் பொருளாதார சவால்களுக்கு இடையே   இம்மாநாடு நடைபெறுகிறது என, இம்மாநாட்டின் முக்கியத் துவத்தை உணர்த்தும் வகையில் மாநாடு துவங்கு வதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா  துணைப் பொதுச்செயலாளர் அமினா ஜே. முகமது  குறிப்பிட்டார். காலநிலை மாற்றம், அதனால் வளரும் நாடு களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, உலக அரசிய லில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள்,  சமத்துவ மின்மை , வறுமை ஆகியவை  சர்வதேச அரசியலில் பன்முகத்தன்மைக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.  இவ்வாறான பிரச்சனைகளுக்கு   தீர்வுகளை வழங்க சிவில் சமூக அமைப்புகள் சிறந்த நிலை யில் உள்ளன.  எனவே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி சரி செய்வதற்கும் , அமைதி, பாது காப்பு, மனித உரிமை பேணல் ஆகியவற்றை  உள் ளடக்கிய நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய  அரசுகள் மக்கள் சமூகங்களுடன் இணைந்து பணியாற்ற  வேண்டும் எனவும்  அமினா ஜே. முக மது  அழைப்பு விடுத்தார். இந்த மாநாட்டில்  புதிய, நிலையான மற்றும் அனைவருக்குமான  எதிர்கால உலகை உரு வாக்கி மனிதர்களிடம் ஒப்படைப்பதை நோக்கமா கக் கொண்ட பயிற்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. ஐ.நா 2030 ஆம் ஆண்டுக்கான இலக்குகளை அடைவதற்கான அணுகுமுறையை ஆராய்வ தோடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான நிதியுதவி மற்றும் இளைஞர்களை  வழிநடத்துதல் உள்ளிட்டவை  குறித்தும் இந்த உச்சிமாநாடு விவாதிக்கும் என்று ஐ.நா சபையின் கொள்கை  துணைச் செயலர் கை ரைடர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் கலந்துகொள் ளும் சிவில் சமூகக் குழுக்கள் , அமைதியை உள்ள டக்கிய வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கும்- புத்து யிர் அளிக்கவும் ,  நீடித்த ஒற்றுமையை  உருவாக்க வும் உதவும்  என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். சர்வதேச அரசியலில் ஆதிக்கத்தை உடைத்து நாடுகளுக்கிடையேயான  பன்முகத்தன்மையை மீண்டும் வலிமையாக உருவாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை பாது காப்பானதாக மாற்றும் வகையில் அதனை மேம் படுத்துவதே  இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

;