districts

காரைக்குடி - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதைகளை விரைவில் மின்மயமாக்க கோரிக்கை

தஞ்சாவூர், பிப்.8 - பட்டுக்கோட்டை வட்ட  ரயில் பயணிகள் நலச் சங்கத் தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கி ணைப்பாளர் மு.கலியபெரு மாள் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கா. லெட்சுமிகாந்தன் வரவேற் றார். சங்க செயலாளர் வ. விவேகானந்தம் ஆண்ட றிக்கை வாசித்தார். சங்கப்  பொருளாளர் பி.சுந்தர ராஜுலு வரவு-செலவு அறிக் கைகளை வாசித்தார். பொதுக்குழு கூட்டத்தில்,  தலைவராக என்.ஜெயரா மன், துணைத் தலைவராக கா.லட்சுமிகாந்தன், செய லாளராக வ.விவேகா னந்தம், துணை செயலா ளராக மு.கலியபெருமாள், பொருளாளராக பி.சுந்தர் ராஜன், செயற்குழு உறுப்பினர்களாக சி. ஸ்ரீதர், வீ.ராஜேந்திரன், வே. சுப்பிரமணி, இரா.இராஜா ராமன், பொதுமக்கள் தொ டர்பாளர் சி.ஸ்ரீதர், தணிக்கை யாளராக எம்.எப்.முஹமது  சலீம், ஒருங்கிணைப்பாள ராக கு.செபஸ்தி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேந்த் தெடுக்கப்பட்டனர். “திருவாரூர் - காரைக் குடி அகல ரயில் பாதையில்  விரைவில் விரைவு வண்டி களை இயக்க ரயில்வே போர்டு சேர்மனை, நாடாளு மன்ற உறுப்பினர்கள் வாயிலாக மீண்டும் வலி யுறுத்தி கோரிக்கை வைக்க வேண்டும். திருவா ரூர்- காரைக்குடி அகல ரயில்  பாதையில் கேட் கீப்பர்களை  நியமனம் செய்ய நடவ டிக்கை எடுத்த, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பி னர்கள், தென்னக ரயில்வே  பொது மேலாளர், திருச்சி  கோட்ட ரயில்வே மேலாளர்,  ரயில்வே துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரி விக்கப்பட்டது. இந்த தடத்தில் சென்னை - காரைக்குடி இரவு நேர விரைவு வண்டிகளை இரு முனைகளில் இருந்தும் இயக்க  வேண்டும். தாம்பரம் -  செங்கோட்டை, வேளாங் கண்ணி - எர்ணாகுளம் விரைவு வண்டிகளை இயக்க வேண்டும். விழுப்புரம் -  மயிலாடுதுறை டெமு பயணி கள் ரயிலை மதுரை வரை  நீட்டிக்க வேண்டும். காரைக் குடி - திருவாரூர் - திருத்துறை ப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதைகளை விரைவில் மின் மயமாக்க வேண்டும். விரைவில் சரக்கு போக்குவரத்து ரயில்களை இயக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;