districts

img

128 குடியிருப்புதாரர்களுக்கு ரூ.20.48 லட்சம் கருணைத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூன் 11- தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் சார்பில் கொளத் தூர், ஜமாலியா லேன் திட்டப் பகுதியில் 130 புதிய  அடுக்குமாடி குடியிருப்புக ளுக்கு சனிக்கிழமை (ஜூன் 11)  அடிக்கல் நாட்டிய  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், மறுகுடியமர்வு செய்ய வுள்ள 128 குடியிருப்புதாரர்க ளுக்கு ரூ.20.48 லட்சம்கரு ணைத் தொகையை வழங்கி னார். கொளத்தூர், ஜமாலியா லேன் பகுதியில் 1976-ஆம் ஆண்டில் 326 சதுரஅடியில் தரை மற்றும் மூன்று தளங்க ளுடன் கட்டப்பட்ட 128  குடியிருப்புகள் சிதிலம டைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அந்த பழையகுடியிருப்புகளை அகற்றி ரூ.17.63 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் ஐந்துதளங்களுடன் கூடிய 130 புதிய குடியிருப்புகள் தலா 413 சதுர அடியில் கட்ட ப்படவுள்ளது.  இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கனவே  இருந்த 128குடியிருப்பு தாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள 2  குடியிருப்புகள், அங்கன் வாடி மையத்திற்கு  வழங்கப் படும். ஒரு குடியிருப்பிற்கான கட்டுமான தொகை ரூ.13.56  லட்சம் ஆகும். இக்குடியிருப் புக்கு மாநில அரசுமானியம் ரூ.10.56 இலட்சம், ஒன்றிய அரசு மானியம் ரூ.1.50 லட்சம்  ஏற்கனவே இங்கு வசிக்கும்  மறுகட்டுமான பயனாளிக ளுக்கான பங்களிப்பு தொகை  ரூ.1.36 லட்சம் என நிர்ண யித்து அரசு ஆணையிட்டுள் ளது. இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் கே.என்.நேரு,  தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மக்க ளவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு நகர்ப் புர வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் மேலாண்மை இயக்குநர்  ம.கோவிந்த ராவ்  உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.

;