districts

தொடர்ந்து விதி மீறும் பிரதமர்

புதுதில்லி, ஏப்.22-பிரதமர் நரேந்திர மோடி தேர்தல்ஆதாயத்திற்காக, தேர்தல் நடத்தை விதிகளை மீறிக்கொண்டிருப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.சீத்தாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:ஆளும் கட்சியினர், இந்தியஆயுதப் படையினரின் நடவடிக்கைகளைத் தங்கள் தேர்தல் ஆதா யத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மிகவும் தெள்ளத்தெளிவாக வழிகாட்டும் நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் இதனை மீளவும் வலியுறுத்திக் கூறியது.நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கூறியுள்ள அறிவுரைகளை, தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மட்டும் தொட ர்ந்து மீறிய வண்ணம் உள்ளார். லட்டூர் என்னுமிடத்தில் மக்களை நோக்கி அவர் பேசும்போது, புல்வாமா தியாகிகள் பெயரில் வாக்களியுங்கள் என்று பேசியதைத் தேர்தல் ஆணையம் அறிந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம். 


எனினும் இவ்வாறு பேசி யமைக்காக அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளை அவர் அவமானப்படுத்துவதிலிருந்தும் அதன்மூலம் தேர்தல் நடைமுறை களை மீறுவதிலிருந்தும் எப்போது தான் தன்னைத் தவிர்த்துக் கொள்ளப்போகிறது; அதை எப்போதுதான் தேர்தல் ஆணையம் கேட்கப்போ கிறது என்றும் நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.சமீபத்தில் நரேந்திர மோடி இரு அறிக்கைகளை பொது வெளியில்வெளியிட்டிருக்கிறார். அவற்றைத்தேர்தல் ஆணையத்தின் கவ னத்திற்குக் கொண்டுவருகிறோம்.குஜராத்தின் தேர்தல் பிரச்சா ரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 21 ஞாயிறன்று, பாகிஸ்தான் மட்டும்இந்திய விமானப் படை விமானிஅபிநந்தனை திருப்பி ஒப்படைக்கா மல் இருந்திருக்குமானால் அது ‘கொலைகளின் இரவாக’ இருந்திருக்கும் என்று பேசியுள்ளார்.மேற்படி சம்பவம் நடந்த இரண்டாவது நாளன்று, அமெரிக்கா வின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா பெரிதாக எதையாவது செய்யும் என்றார். மோடி 12 ஏவுகணைகளுடன் தயாராக இருந்தார்; அது ஒரு மிகவும் கடுமையான நிலை மையாக இருந்திருக்கும். எனவே, பாகிஸ்தான் இந்திய விமானியை திருப்பி அனுப்புவதாக அறிவித்தது; இல்லையேல் அது கொலைகளின் இரவாக இருந்திருக்கும்’’ என்று பாட்டனில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் மோடி பேசி யுள்ளார்.


ஆனால், இதற்கு முரணாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஹனோயில் உலக ஊடகங் கள் முன் பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து நல்ல செய்தியை எதிர்பார்க்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவ்வாறு டிரம்ப் பேசியது, பாகிஸ்தான் அபிநந்தனைத் திருப்பி அனுப்பிய ஒரு சில மணிநேரங்களுக்கு முன்பாகும்.ஆனால் தற்போது, தன்னுடைய அச்சுறுத்தலுக்குப் பயந்து தான் பாகிஸ்தான் இந்திய விமானப் படையின் விமானியைத் திருப்பி அனுப்பியது போன்று மோடி உரிமை கொண்டாடுகிறார்.மோடி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்கிற அள விற்கு மிகவும் பொறுப்பற்ற முறையிலும் முரட்டுத்தனமாகவும் பேசியிருக்கிறார். பார்மர் என்னு மிடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘‘பாகிஸ்தான் ஒவ்வொரு நாளும் நாங்கள் அணு ஆயுதத்தின் பொத்தானை வைத்திருக்கிறோம், என்று கூறிக்கொண்டி ருக்கிறது. நாங்கள் மட்டும் என்ன அவற்றைத் தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம்?’’ என்று பேசியிருக்கிறார்.


ஆயுதப் படையினரின் செயல் பாடுகளை வெட்கமில்லாமல் தங்கள்அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்வதும், அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்துவதும் ஒருவித மான குறுகிய அரசியல் லாபத்திற்கான நடவடிக்கையாகும். இதன்மூலம் மக்களிடம் வாக்குகளைக் கவர்ந்திட லாம் என்கிற நோக்கமேயாகும்.இவ்வாறு வாரணாசி தொகுதி யில் வேட்பாளராகப் போட்டியிடும் பிரதமர் ஆயுதப்படையினரைப் பயன்படுத்திக் கொள்வதும் அதன்மூலம் மக்களிடம் வாக்கு கோருவதும் நேரடியாகவே தேர்தல் நடத்தை விதி மீறல்களாகும்.பிரதமரின் இத்தகைய பேச்சு களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.தேர்தல் நடத்தை விதிகள் என்பது உண்மையில் அனைத்துக் கட்சியினரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது என்பதை கவனத்தில் கொண்டு, பிரதமர் மோடிக்கு எதிராகநடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கடிதத்தில் கூறியுள்ளார். (ந.நி.)

;