பேஸ்புக் உலா

img

"ரத்தம் கக்கி சாவாய்" என்று யாரையும் ஒருபோதும் பயமுறுத்துவதில்லை வள்ளுவம் - ஆர்.பாலகிருஷ்ணன்

வள்ளுவம் என்பது
நிபந்தனைகளால்
நிரம்பிய‌
சடங்குகளின்
கிடங்கு அல்ல..
அது ஒரு வாழ்வறம்...

வள்ளுவம்
அவரவரின்
வாசிப்பிற்கும்
புரிதலுக்கும்
இடம் கொடுக்கும்
இலக்கியம்..

அதனால் தான்
அது
நிகழ்காலத்திலும்
நெருக்கமாக இருக்கிறது
மனசுக்கு..

வள்ளுவம்..
வாழும் வகையைச்
சொல்கிறது..
ஆனால் அது
"ரத்தம் கக்கி
சாவாய்" என்று
யாரையும் ஒருபோதும்
பயமுறுத்துவதில்லை.

திருக்குறள்
ஒரு
திறந்தவெளி அரங்கம்.
அனுமதி இலவசம்..

வள்ளுவரே
ஒரு சகமனிதர் தான்.
தோழமை தான்
திருக்குறளின் உடல் மொழி!

அதனால்
கால நதியை
இயல்பாக‌க்
கடக்கிறது குறள்..

மன்னர்களும்
மந்திரிகளும்
ராஜகுருக்களும்
வந்து வந்து
போகிறார்கள்
வரலாற்றின் தெருக்களில்...

இதோ..
திருக்குறள் நிற்கிறது...
அதன்
செந்தண்மை பூண்ட
சிறப்பின்
இருப்பில்...

ஆர்.பாலகிருஷ்ணன்

;