பேஸ்புக் உலா

img

நீ முறித்துப் போட கழுத்து ஒன்றும் வாழைத்தண்டோ வெண்டைக்காயோ அல்ல -ச. மாடசாமி

பொய்களிலும், வாய்ச் சவடால்களிலும் மயங்குகிறவர்கள்..மனதுக்குள் வன்முறையை மறைத்து வாழ்பவர்கள்..பிறர் துன்பங்களை அலட்சியப்படுத்துபவர்கள் தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள்.
மக்கள் ஒற்றுமையிலும் தேச நலனிலும் அக்கறை கொண்டவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.
அமைச்சராக அல்ல- ஆங்காரம் கொண்ட வேட்டைக்காரர் போல் நின்று குடியுரிமை மசோதா குறித்துப் பேசுகிறார் அமித்ஷா. அவமானம்!
இந்தியாவின் கழுத்தை முறிக்கப் பார்க்கிறது பேயரசு.
நீ முறித்துப் போட கழுத்து ஒன்றும் வாழைத்தண்டோ வெண்டைக்காயோ அல்ல.
இந்த தேசத்தின் கழுத்து ஒற்றுமை என்னும் எஃகால் உருவானது. கழுத்தில் கைவைத்த கொடுங்கரங்கள்தான் முறிந்து நொறுங்கும். இது நிச்சயம்.

-ச. மாடசாமி

;