பேஸ்புக் உலா

img

பன்முக திறன் கொண்ட தோழர் முகில் பரமானந்தன் - வெங்கடேஷ் ஆத்ரேயா

அருமை தோழர் முகில் பரமானந்தன் அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. திருச்சி பி ஹெச் இ எல் நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் இருந்தே நாங்கள் தோழர்களாக நெருங்கி பழகினோம். பன்முக திறன் கொண்ட தோழர். மானுட விடுதலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மார்க்சீயப் பாதையை ஏற்று செயல்பட்டவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். சிறந்த பாடகர். மக்கள் கலை மற்றும் பண்பாடு குறித்து ஆய்வு செய்தவர். என்னால் அவர் மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இயக்கத்தில் பயணித்து பங்களித்திருக்க வேண்டிய தோழர். அவரது பல அறிவியல் அறிவொளி இயக்கப்பாடல்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். இதோ வலுமிக்க எளிதில் புரியும் இரண்டு வரிகள்:

அழகான வாழ்க்கை அமைய ஆணும் பெண்ணும் போதுமுங்க! 
அதுக்குமேல ஜாதகமெல்லாம் அவசியமில்லா விஷயம் தாங்க!

மூட நம்பிக்கை எதிர்ப்பையும் சாதி மறுப்பையும் நறுக்கென்று சொல்லும் வரிகள்.

தோழர் முகிலுக்கு கண்ணீர் அஞ்சலி. செவ்வணக்கம்.

;