பேஸ்புக் உலா

img

இதுதாண்டா நவ இந்தியா...

கும்பலாகச் சேர்ந்து மாட்டுக்கறி வைத்துள்ளான் எனச் சொல்லி ஒருவனைக் கொல்பவர்கள் இப்போது எம்.எல்.ஏ, எம்.பிக்கள். ஆனால் அது கூடாது எனச் சொல்வது குற்றம். கும்பலாகச் சேர்ந்து ஒரு நபரை உரிய காரணங்கள் இன்றிக் கொல்லக் கூடாது எனச் சொன்னால் அது மத உணர்வைப் புண்படுத்தல், அது தேசத்துரோகம். அது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல். அபடித்தான் இன்று அந்த நீதிபதி ஒரு பொது நல (!) வழக்கொன்றில் இன்று ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், மணிரத்னம் உள்ளிட்ட 49 அறிவுஜீவிகள், திரைப்பட இயக்குனத்கள் முதலானோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்டுள்ளார். Public Interest Pettition என்பது நேரடியாகப் பாதிக்கப்படாதபோதும் பொது நலம், சட்டபூர்வமான உரிமை ஆகியவற்றைக் காக்கப் பயன்பட்ட ஒன்று. இன்று அது பொது நலத் தொண்டர்களுக்கு, அரசியல் சட்ட உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறது. அதை நீதிமன்றங்கள் ஏற்கின்றன. இனி இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாகும்..

- Marx Anthonisamy

;