தேர்தல்

img

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச 27 மற்றும் 30 ல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்


தமிழகத்தில் ஊராக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்  இன்று செய்தியாளர்களிடம்  கூறியதாவது : 
புதியதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.  முதல் கட்டமாக டிசம்பர் 27 அன்றும் இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30 அன்றும் நடைபெறும். இரண்டு கட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 2020ம் ஆண்டு ஜனவரி 2 அன்று நடைபெறும். வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9,  வேட்புமனு பரிசீலனை  டிசம்பர் 17, வேட்புமனு வாபஸ் டிசம்பர் 19  அன்று நடைபெறும். மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் ஆகிய பகுதிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11 அன்று நடைபெறும் என்று தெரிவித்தார். 

;