வோளாண் கல்லூரி மாணவிகள் கற்றல் களப் பயணம்
புதுக்கோட்டை, ஏப்.23 - புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மன வாளங்கரை கிராமத்தில் திருவரங்குளம் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் வயலில் நடவு செய்தனர். அப்போது, மனவாளங்கரை கிராம விவ சாயிகள் தாங்கள் காலம் கலமாக நடவு செய்யும் முறை, நீர்ப்பாய்ச்சுதல், களையெடுத் தல், உரம் போடுதல், அறுவடை செய்தல் உள்ளிட்ட சாகுபடி முறைகள் குறித்து மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டனர். கிராம மக்களின் சாகுபடி முறைகளைத் தெரிந்து கொண்ட மாணவிகள், அவர்களின் அனுபவங்களோடு. புதிய தொழில்நுட்பங்க ளையும் இணைத்து விவசாயம் செய்தால் உபரியான தண்ணீர் பயன்பாட்டை தடுக்க முடியும் என்றும், குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்பதையும் விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.