தமிழகம்

img

மும்பையில் தவிக்கும் உறவினர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்-கண்ணீருடன் காத்திருக்கும் கிராம மக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியை அடுத்துள்ள கே.ஆண்டிபட்டி கிராமத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மும்பை தாராவி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிழைப்பு தேடி சென்றுள்ளனர்.
தற்போதைய ஊரடங்கு உத்தரவு காரணமாக 300க்கும் அதிகமானோர் வீட்டுக்குள்ளேயே பட்டினியுடன் முடங்கி உள்ளனர். மேலும்  அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை எனவும், ரேசன் கார்டுகள் இல்லாததால் ரேசன் பொருட்கள் கூட கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இதனையறிந்து கே.ஆண்டிபட்டி மக்கள் தங்கள் உறவினர்களை மீட்கவும், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யுமாறு கண்ணீருடன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

;