தமிழகம்

img

சிபிஎம் மூத்த தலைவர் ஏ.பி.சிலைக்கு தலைவர்கள் மரியாதை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும் மூத்த தலைவருமான  தோழர் ஏ.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு வியாழனன்று திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திண்டுக்கல்  சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் உள்ள ஏ.பாலசுப்ரமணியத்தின் உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, சிஐடியு மாவட்டச் செயலாளர்  கே.ஆர்.கணேசன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி, நகரச் செயலாளர் பி.ஆஸாத், ஒன்றியச் செயலாளர் தா.அஜாய்கோஷ், தோல்பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கௌரவத்தலைவர் ஸ்டாலின்,  செயலாளர் சி.பி.ஜெயசீலன், பொருளாளர் தவக்குமார், சிறுபான்மை மக்கள் நலக்குழு அமைப்பின் மாவட்டச் செயலாளர் வ.கல்யாணசுந்தரம், மாவட்டத்தலைவர் அரபுமுகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;