திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தமிழகம்

img

ஆசிரியர்களின் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளே.... சங்கத் தலைவர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுக...

சென்னை:
ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழக பள்ளிக்கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஜ லை 2 அன்றுமாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் தலைமையில் காணொலிவழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்தியத் துணைத்தலைவர் கே.ராஜேந்திரன். அகில இந்தியச் செயலாளர் கே.பி.ஓ. சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், 2019-20 ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்புப்பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு (விடுபட்ட பாடங்கள்) ரத்து செய்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை விமர்சித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் கருத்து வெளியிட்டதாக இந்தியப் பள்ளி ஆசிரியர்கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரும், தஞ்சாவூர் மாவட்டம் மனையேறிப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியருமான மா.ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மா.ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார் கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமாகிய பி.பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதி 17(ஆ) கீழான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையின் மீது அக்கறை கொண்டு மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் சங்கத்தலைவர்கள் அரசாணை எண்: 54ன் மீது தங்களது சங்கத்தின்கருத்துக்களைத் தெரிவித்ததை பள்ளிக்கல்வித்துறை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளாக எடுத்துக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் 17(ஆ) நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்பிரச்சனையில் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கையைப் பொறுத்து 20.07.2020 அன்று நடைபெறவுள்ள அடுததுமாநிலக்குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

11ஆம் வகுப்பு பாடத்திட்டம்
மேலும், கொரோனா பேரிடர் மீட்புப் பணிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. பள்ளிகள் திறப்புத் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். 11 ஆம வகுப்பில்பழைய பாடத்திட்ட நடைமுறையே தொடர வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பக்தவச்சலம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சங்கர், தமிழ்நாடு தனியார்பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவஸ்ரீரமேஷ், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரிமற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் உதய சூரியன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் செ.நா.ஜார்த்தனன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிஆசிரியர் கழகத்தன் மாநில நிர்வாகிகள் உட்பட 9 ஆசிரியர் இயக்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;