tamilnadu

img

கள்ளக்குறிச்சியில் 26 கடைகள் அகற்றம் பெரிய ஏரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு

  கள்ளக்குறிச்சியில் 26 கடைகள் அகற்றம் பெரிய ஏரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு

கள்ளக்குறிச்சி, ஏப். 22 - கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 கடை களை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடித்து அகற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை அருகில் கள்ளக்குறிச்சி பெரிய ஏரியில் இருந்து செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து  கட்டப்பட்டி ருந்த கட்டிடங்களை கடந்த ஜூன் மாதம் இடித்து அகற்றப்பட்ட நிலையில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டி டங்கள் கட்டிருந்த கேசவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தி ருந்த வழக்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்திருந்த நிலை யில் அந்தக் கட்டிடங்கள் இடிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்தது. இந்நிலையில் செவ்வாயன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டி ருந்த 26 கடைகளையும் இடித்து அகற்றினர். கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலை யாக இருக்கக்கூடிய கச்சிராயப்பாளையம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அப்பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடை பெற்று வருகிறது.