அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் உதயகுமார் :- கிராம பொருளாதாரம் உயர முதல்வர் பாடுபாடுகிறார் 
ச சா - இந்த விஷயம் முதலமைச்சருக்கு தெரியுமா.?!?
• • •
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் :- மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் பேனர் வைக்க அனுமதி கோரியுள்ளோம்.
ச .சா - மக்கள்தான் பேனருக்கு இடையூறுன்னு வழக்கு போடாம இருக்கணுமே...?
• • •
பிரதமர் மோடி :- இன்றும் உலகின் லட்சக்கணக்கான மக்களுக்கு காந்தி தைரியம் ஊட்டுகிறார்.
ச.சா - உண்மைதான்... ஆர்.எஸ்.எஸ்-பாஜக மதவெறிக்கு எதிரான போராட்டத்துக்கும் தைரியம் ஊட்டுறாரே...?!?
• • •
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன் :- நிறுவன வரி குறைப்பு கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தத்தின் துவக்கம்.
ச.சா - சாதாரண மக்கள மொட்டையடிக்காம விட மாட்டீங்களோ...??!!

;