what-they-told

img

எடப்பாடி பழனிசாமி அரசின் பதற்றம்

நூறுநாள் வேலைத்திட்டத்தில் 3 மாதமாக வேலை தராதது ஏன்?

ரூ.4200 கோடி அளவிற்கு நடந்துள்ள ஊழலுக்கு பதில் என்ன :  ஏ.லாசர் கேள்வி

சென்னை, மார்ச் 11- மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறு தித்திட்டத்தை முறை யாக அமல்படுத்தாத தமி ழகத்தின் எடப்பாடி பழ னிசாமி அரசு, விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தால் பதற்ற மடைந்தது ஏன் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. மாநிலம் முழுவதும் இருந்து விவசாயத் தொழிலாளிகள் வேலை வழங்க கோரிக்கை மனு அனுப்பினார்கள். அதேபோல் ஏற்கெனவே செய்த சில வேலைகளுக்கும் சம்பளம் வழங்கவில்லை, அதை வழங்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். கிரா மப்புற நூறுநாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் நகராட்சிப் பகுதிகளிலும் விரிவடையச் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதையெல்லாம் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதே காலத்தில் மத்திய தணிக்கைக் குழு தமிழகத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தை ஆய்வு செய்து கடந்த மூன்று ஆண்டுகளில் 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதைக் கண்டறிந்து தவறிழைத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியிருந்தது. இவை எதையும் தமிழக அரசு கண்டுகொள்ளாத நிலையே இருந்தது.

இந்நிலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், மாநிலம் முழுவதும் நடந்துள்ள முறைகேடுகள் மீது நடவடிக்கையும் சட்டப்பூர்வமாக அமல்படுத்த வேண்டிய நூறுநாள் வேலைத்திட்டப் பணிகள் முடங்கிக் கிடப்பதும், வேலை செய்த தொழி லாளிக்கு அதன் சம்பளத்தை மூன்று மாதங்களுக்கு மேல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் என்றும உரிய நடவடிக்கை எடுத்து லட்சக்கணக்கான விவ சாயத் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டுமெனக் கோரியும் மார்ச் முதல் வாரத்தில் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு, தமிழ்நாடு முழு வதும் மக்கள் சந்திப்பையும், தெருமுனைக் கூட்டங்களையும், பிரச்சாரத்தையும் நடத்தியது. அத்தோடு மார்ச் மாதம் 10 தேதி அன்று தமிழகம் முழு வதும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலா ளர்களை திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தி மனுக்கள் அளிப்பது என்று முடிவெடுத்து களத்தில் இறங்கியது. 

அரசின் அச்சமும் மிரட்டலும்

இந்நிலையில் பிரச்சாரங்கள் நடந்துகொண்டி ருந்த சூழ்நிலையிலேயே தமிழக அரசு மார்ச் 2, 3 தேதிகளிலிருந்தே ஆங்காங்கே தொழிலாளிகளுக்கு வேலைகளை கொடுக்கத் துவங்கியது. 5, 6 தேதி கள் நெருங்குகிற போது கிராம மக்களை அதிகாரி களும் ஆளுங்கட்சியினரும் உள்ளாட்சி மன்ற பிரதி நிதிகளும் சந்தித்து நாங்கள் வேலை தருகிறோம்; சம்பளப் பாக்கியையும் தந்துவிடுகிறோம்; இனி மேல் இந்தப் பிரச்சனை வராது; 10ந்தேதி விவசாயத் தொழிலாளர் சங்கப் போராட்டங்களில் நீங்கள் யாரும் பங்கெடுக்க வேண்டாம் எனக் கூறி, ‘புயல்வேகத்தில்’ கிராமப்புற மக்களைச் சந்தித்து 10ந்தேதி போராட்டத் தில் பங்கேற்க வேண்டாம் என்கிற தன்மையில் மிரட்டலுடன் கூடிய வேண்டுகோளை விடுத்து எல்லா இடங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த காலங்களிலும் ஆறு மாதங்களுக்கு மேல் சம்பளப் பாக்கியை தமிழக அரசு வழங்காத காலத்தில்,  மத்திய அரசும் அதனுடைய மாநி லத்திற்கான ஈவுத்தொகையை தராமல் நிறுத்தி வைத்திருந்த பொழுது  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் 2017-18ம் ஆண்டு தீபாவளிக் காலத்தில் ஆட்சியர் அலுவலகங்களை பல்லாயிரக்க ணக்கான விவசாயிகளைத் தொழிலாளர்களை திரட்டி முற்றுகையிட்டது. ஆட்சியர் அலுவலகங்கள் செயல்பட முடியாத நிலை அன்று ஏற்பட்டது. அதன்பின்புதான் உடனடியாக பணம் தீபாவளிக்கு இரண்டு நாளுக்கு முன்பு வழங்கப்பட்டது. இப்படி  சட்டத்தை அமல்படுத்துவதற்கு, தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் போராடித்தான் பெறுவது என்ற நிலைமையே தொடர்கிறது. இப்பொழுதும் பதற்றப்பட்டு பழனிசாமி யின் அரசு மூன்று நாளிலே சட்டத்தை அமல்படுத்து வது போன்ற ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது தொழிலாளிகளின் மீது உள்ள அக்கறை யினால் அல்ல; அரசு அலுவலகங்களில் ஆண்களும், பெண்களும் திரள்வார்கள் என்ற அச்சத்தினால்தான் இனிவரும் காலங்களிலாவது தமிழக அரசு உழைப்பாளி மக்களின் நியாயமான கோரிக்கை களை காலத்தில் செய்திட வேண்டும் என்றும் மக்களின் நலனில் அக்கறை செலுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

;