tamilnadu

img

விருதுநகர் எம்.பி யின் கோரிக்கையை ஏற்ற இலங்கை அரசு.... விசா காலத்தை மே.12 வரை நீட்டித்தது

விருதுநகர்:
 விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால், அவர்கள் அங்கு சிக்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதால், அவர்களது விசா காலம் மே.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்  மாவட்டம், சிவகாசி, சாத்தூர், இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்தனர். தற்போது, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல்  தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களுக்கான விசா காலம் நிறைவடைய உள்ளதாகவும், இதனால், தாங்கள் தவித்து வருவதாகவும் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இத்தகவல் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு தெரிய வந்தது. உடனடியாக, மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். பின்பு, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் அனைவருக்கும் வரும் மே.12 வரை விசாவை நீட்டிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.மேலும், விருதுநகர் எம்.பிக்கு பதில் கடிதமும் தூதரகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

;