tamilnadu

img

மகாராஷ்டிரத்தில் 4 மாதத்தில் மட்டும் 808 விவசாயிகள் தற்கொலை!

மும்பை:
பாஜக - சிவசேனா கூட்டணி நடக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த 4 மாதங்களில் மட்டும் 808 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் சொந்தப் பிராந்தியமான விதர்பாவில்தான், மாநிலத்திலேயே அதிகபட்சமாக 344 தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதாக புள்ளி
விவரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாகவே, மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை உச்சத்தில் இருக்கிறது. போதிய மழையின்மை, வறட்சி, விவசாயப் பொருட்களுக்கான விலையின்மை போன்றவற்றுடன், ஆட்சியாளர்களின் பாராமுகத்தாலும், மகாராஷ்டிர விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தில் சிக்கித் தவிக்கின்றனர். வாழவழி தெரியாமலும், வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும் தொடர்ந்து தற் கொலை செய்து வருகின்றனர்.

அந்த வகையிலேயே, 2019-ஆம்ஆண்டில், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் மட்டும் 808 விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். இதில் விதர்பா பகுதியில் 344 விவசாயிகளும், மரத்வாடா பகுதியில் 269 விவசாயிகளும், வடக்கு மகாராஷ்டிராவில் 161 விவசாயிகளும், மேற்கு மகாராஷ்டிரத்தில் 34 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொங்கன் பகுதியில் மட்டும் தற்கொலைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.2018-19 காலகட்டம், மகாராஷ்டிர விவசாயிகளுக்கு துயரமானதாகும். இந்த காலத்தில், மாநிலத்தின் 42 சதவிகித பகுதிகள் மோசமான வறட்சிக்கு ஆளாகியுள்ளன. சுமார் 60 சதவிகித விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் பயிர்களும் கருகிப் போயிருக்கின்றன.

இவ்வளவு கொடுமையிலும் விவசாயிகள் தங்களுக்குள் கூறி ஆறுதல்பட்டுக் கொள்ளும் செய்தி என்னவென் றால், கடந்த 2018-ஆம் ஆண்டின் தற் கொலைகளை விட, தற்போதைய தற் கொலைகள் குறைவு என்பதுதான். கடந்த 2018-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தற்கொலை செய்தவிவசாயிகள் எண்ணிக்கை 896 எனும் போது, 2019- ஆண்டின் நான்கு மாதங்களிலோ 88 தற்கொலைகள் குறைந்து 808 என்ற எண்ணிக்கையில் நின்றுவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

;