tamilnadu

img

மக்களின் சேமிப்புக்கும் கூட பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது!

மும்பை:
பாஜக தலைவர்கள் இயக்குநர்களாக இருக் கும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில், சுமார் 2 ஆயிரத்து 500 கோடிரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, பிஎம்சி வங்கி நிதி மோசடி தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட ரிசர்வ் வங்கி, இந்த வங்கியில் ஆறு மாதங்களுக்கு அதன்வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்பு நிதியை எடுக்க முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில்தான், “சாமானிய மக்களின் சேமிப்புக்கும் கூட நாட்டில் பாதுகாப்பில்லாத நிலைஏற்பட்டு விட்டது” என்று எச்டிஎப்சி வங்கியின் தலைவர் தீபக் பரேக் (Deepak parekh) கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“வாடிக்கையாளர்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவது மிகப் பெரிய பாவம்.மக்கள் கடின உழைப்பினால் ஈட்டிய பணத்தை பாதுகாப்பு கருதி வங்கியில் சேமிக்கின்றனர். அந்தபாதுகாப்பை உறுதி செய்வது வங்கிகளின் கடமை.வங்கி நிதி அமைப்பு தொடர்பாக இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய தேவையுள்ளது. கடன் தள்ளுபடி போன்றவற்றை மேற்கொள்ளும் நாம், சாதாரண மக்களின் பணத்தைப்பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.மக்களின் நம்பிக்கையைப் பெற பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். ஆனால் தவறான ஒரு செயல்களால் அந்த நம்பிக்கை ஒரே நாளில் போய் விடும்.துரதிர்ஷ்டவசமாக மக்களின் நம்பிக்கையை இழக்கும் வகையிலேயே வங்கி கள் செயல்பட்டு வருகின்றன. உண்மையும், நம்பிக்கையுமே எந்த ஒரு தொழிலுக்கும் அடிப்படை. அவற்றை தக்க வைப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும்.”இவ்வாறு தீபக் பரேக் குறிப்பிட்டுள்ளார்.

;