tamilnadu

img

பட்னாவிஸின் பிராமண ஆதிக்கம்: மகாராஷ்டிர பாஜகவில் பிளவு?

மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூம்- பாஜக தலைமையும், கட்சிக்குள்பிராமணர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக, அங்குள்ள ஓபிசி வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு வலுத்துள்ளது.இதனால், மகாராஷ்டிர மாநில பாஜக, இரண்டாக பிளவுபடலாம் என் றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே. இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி)சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்ஆவார். இவர், கடந்த பாஜக ஆட்சியில்அமைச்சராகவும் இருந்தார். ஆனால், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில்தோல்வியடைந்தார். இதேபோல வேறுபல ஓபிசி தலைவர்களும் தோற்றுப் போயினர். இதுதான் தற்போதைய பிரச்சனைக்கு காரணமாகியுள்ளது.பங்கஜா முண்டே போன்ற ஓபிசி வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள், தனது முதல்வர் பதவிக்கு போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காக, தேவேந்திரபட்னாவிஸே, அவர்களை மறைமுகமாக தோற்கடித்து விட்டதாக ஏக்நாத் கட்சே உள்ளிட்ட ஓபிசி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.“பாஜக-வுக்குள் இருக்கும் ஓபிசிதலைவர்கள் கட்சியின் மகாராஷ்டிரதலைமையால் ஓரங்கட்டப்படுகிறார் கள்; இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, ஆனால் 2019 சட்டமன்றத் தேர்தலில் இது மிகவும் தெளிவாகத் தெரிந் தது; பாஜக மாநில தலைமை எங்கள் (ஓபிசி) தலைவர்களின் பலத்தை குறைக்க முயற்சிக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ பிரகாஷ் ஷெண்ட்கே.“ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேவேந்திர பட்னாவிஸின் அனுமதியின்றி கேள்விகளைக் கேட்கவோ அல்லது எங்கள் குறைகளை சட்டமன்றத்தில் பேசவோ முடிந்ததில்லை என்கிறார், பாஜக முன்னாள் எம்எல்ஏ ராஜூ தோட்சம்.இதனிடையே, பங்கஜா முண்டே தலைமையில் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த சுமார் 15 சட்டமன்ற உறுப்பினர்கள், பட்னாவிஸூக்கு எதிராக கட்சிக்குள் செயல்படுவது அல்லது சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிர பாஜக பிளவுபடும் என்று கூறப்படுகிறது.

;