tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க மதுரை ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

மதுரை:
கொரோனா பரவலால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கும் தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு  அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவேண்டுமென்ற குரல் மதுரை மாவட்டத்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 48 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 22 ஆயிரம் பேர் நலவாரியத்தில் பதிவு செய்து உறுப்பினர் அட்டை வைத்துள்ளனர்.  இந்த விபரத்தை மதுரை ஆட்சியரிடம் இந்த விபரத்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. அவரும் உரிய நேரத்தில் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். கொரோனாவில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். குறிப்பாக மிகவும் வறுமையில் உள்ள ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கிறார் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி வன்னிவேலம்பட்டி முருகன். இவர்களுக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், அரிசி, பருப்பு, பாமாயில், சீனி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை  அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். மதுரை ஆட்சியர்  நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு உணவுப் பொருட்கள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

;