tamilnadu

தபால் வாக்குகள் வழங்கும் பணி இன்று நிறைவு பெறும் என்கிறார் ஆட்சியர்

மதுரை, ஏப்.11-மதுரை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ச.நடராஜன் வியாழனன்று செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-மதுரை மாவட்டத்தில் 11,258 அரசு ஊழியர்கள், 2,815 காவல்துறை தபால் வாக்குகள் உள்ளன, அவர்களுக்கு வாக்குச் சீட்டுவழங்கும் பணி வெள்ளியன்று நிறைவுபெறும், திருப்பரங்குன்றம் இடைத்தேர் தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தவுடன் இடைத்தேர்தல் பணிகள் தொடங்கும். துணை இராணுவம், வெளி மாநில காவல்துறை, என 2,200 பேர் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுகின்றனர், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 197 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரம் செய்ய 1009 மனுக்கள் வந்ததில் 944 மனுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, பணம் கொடுக்க டோக்கன் கொடுத்தற்காக ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆறு டோக்கன்களும், இரண்டு பட்டியல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.27 வேட்பாளர்களில் நான்கு வேட்பாளர்கள் தேர்தல் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றார்.

;