tamilnadu

img

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யத் திட்டம்? அடுத்தகட்டத் தாக்குதலை துவங்கும் மோடி அரசு

புதுதில்லி:
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கிவரும் மானியத் தொகையை முழுமையாக ரத்துசெய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைபொறுத்து, வீட்டு உபயோகத்துக் கான சமையல் எரிவாயு சிலிண்டரின் (14.2 கிலோ கிராம்) விலை மாதந்தோறும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கிய மத்திய அரசு, எரிவாயு மானியத்தை ரொக்கமாக வங்கிகள் மூலம் வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கிவரும் மானியத் தொகையைத்தான், நடப்பாண்டில் மத்திய அரசு ரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பை காரணமாகக் காட்டி, மத்திய அரசு இதனைச் செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என்றும் மோடி அரசு கணக்குப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.செப்டம்பர் ஒன்றாம் தேதி நிலவரப்படி, மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ. 610 ஆக உள்ளது. இதுவே ஆகஸ்ட், ஜூலை, ஜூன் ஆகிய மாதங்களில் முறையே 610.50, 610.50, 606.50 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

;