tamilnadu

img

நிர்பயா வழக்கு: மத்திய அரசு மனு மீதான விசாரணை பிப்.11-க்கு தள்ளிவைப்பு

புதுதில்லி:
நிர்பயா கைதிகளை தனித்தனி நாட்களில் தூக்கில் போட  அனுமதி கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல்பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.  இந்த வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 4 கைதிகளும் தங்களுக்கான சட்ட நிவாரணங்களை தேடிக்கொள்ள தில்லி உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமையன்று 7 நாட்கள்கெடு விதித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, இந்த கெடு பிப்ரவரி 11 ஆம் தேதி முடிவடைவதால் அன்று பிற்பகல் 2 மணிக்கு மத்திய அரசின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. 

;