tamilnadu

img

புதிய இந்தியாவின் புதிய ‘ஹிட்லர்’ மோடி!

புதுதில்லி:
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா செய்தித் தொடர்பாளரான சந்தீப்தேஷ்பாண்டே, பிரதமர் நரேந்திர மோடியை, ‘புதிய இந்தியாவின் புதிய ஹிட்லர்’ என்று வர்ணித் துள்ளார்.கோஹினூர் வழக்கு தொடர் பாக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஜோஷியிடம், அமலாக்கத்துறை, குடைந்து குடைந்து விசாரணை செய்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின்தலைவரான ராஜ் தாக்கரே-வுக்கும்அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையிலேயே, அமலாக்கத் துறையின் விசாரணையானது, மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தேஷ் பாண்டேவிமர்சித்துள்ளார்.“அமலாக்கத்துறையினர், கடந்தஐந்தாறு ஆண்டுகளில் ஏன், பாஜகவினர் எவரையுமே விசாரிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ள பாண்டே, இத்தகைய ‘ஹிட்லர் தர்பாருக்கு’ எதிராக எங்கள் போராட்டம் வரவிருக்கும் காலங்களில் தீவிரமடையும் என்றும் கூறியுள்ளார்.

“ராஜ் தாக்கரேயின் பேச்சுக்கள்,மக்களவைத் தேர்தலின்போது பாஜகவிற்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.இது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின்போதும் தொடரக்கூடாது என்பதற்காகவே ராஜ் தாக்கரே-வுக்கு அமலாக்கத்துறையினர் அறிவிப்பு அனுப்பி இருக்கின்றனர்; இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறல்ல; ராஜ் தாக்கரே ‘புதிய இந்தியாவின் புதியஹிட்லருக்கு’ எதிராக எதிர்க்கட்சியினரை ஒன்றுபடுத்திக் கொண்டிருப்பதால், பாஜக-விற்கு நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் பிரதிபலிப்பே இந்த விசாரணைகள்; எனினும், மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனையோ அல்லது ராஜ் தாக்கரே-வோ, பாஜகவினரின் மிரட்டல் அரசியலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டார்கள். எதேச்சதிகாரத்திற்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்” என்றும் சந்தீப் தேஷ்பாண்டே கூறியுள்ளார். (ந.நி.)

;