tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

‘கரீப் கல்யாண்’  உ.பி.யிலும் துவக்கம்!

புலம்பெயர் தொழி லாளர்களுக்கு அவர் கள் வசிக்கும் மாவட்ட ங்களிலேயே வேலை வாய்ப்பு வழங்கும் “கரீப் கல்யாண் ரோஜ் கார் யோஜனா” திட்ட த்தை. அண்மையில் பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தற்போது உத்தரப்பிரதேசத்திற்கும் இத்திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.

பிளாஸ்மா தெரபியால் குறையும் இறப்பு!

பிளாஸ்மா தெரபி  சிகிச்சையால் கொரா னா பாதிப்புக்கான இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என தில்லி முதல்வர் கெஜ்ரி வால் கூறியுள்ளார். பிளாஸ்மா தெரபியால் தீவிர ஆபத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவது கடினம். ஆனால், லேசான பாதிப்பு உள்ளவர்களின் நிலைமை  மோசமடையாமல் இருப்பதற்கு இச்சிகிச்சை உதவுகிறது என்று அவர் தெரி வித்துள்ளார்.

தில்லி விடுதிகளில் சீனர்களுக்கு இடமில்லை

“சீனத் தயாரிப்பு களுக்கு எதிரான போரா ட்டத்திற்கு ஆதரவளிக் கும் வகையில், தங்க ளின் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்தமாட்டோம். மேலும் இந்தியா வரும் சீனர்கள் தில்லி யில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு அறைகளும் ஒதுக்க மாட்டோம்” என்று தில்லியில் உள்ள ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

சிபிஐ நீதிமன்ற அறையில் இளம்பெண் வல்லுறவு!

தில்லி ரோஸ் அவெ ன்யூவில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இங்குள்ள ஒரு அறை யிலேயே 30 வயது இளம் பெண்ணை, கல்யாண் புரியைச் சேர்ந்த ராஜே ந்திர சிங் என்ற நீதி மன்ற ஊழியர் பாலியல் வல்லுறவுக் கொடு மைக்கு உள்ளாக்கியுள்ளார். பாதிக்கப் பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ராஜே ந்திர சிங் தற்போது கைது செய்யப்பட்டுள் ளார்.

சலூன் கடைகளைத் திறக்க அனுமதி!

மகாராஷ்டிராவில் 3 மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 28 முதல் சலூன் கடைகளைத் திறப்ப தற்கு அனுமதி வழங்கி அம்மாநில முதல்வர் உத் தவ் தாக்கரே உத்தர விட்டுள்ளார். மகாரா ஷ்டிராவில் கடந்த 3 மாத பொதுமுடக்கக் காலத்தில்,  முடிதிருத்தும் தொழிலாளர் கள் 12 பேர் வரை, வறுமையால் தற்கொ லை செய்து கொண்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

உ.பி., பீகாரில்,   இடிதாக்கி 107 பேர் பலி

உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை  தீவிரமாக பெய்து வரு கிறது. இந்நிலையில், இந்த மழையின் போது இடி விழுந்து, ஒரே நாளில் மட்டும் பீகார் மாநிலத்தில் 83 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 24 பேரும் இடிதாக்கி இறந்துள்ளனர். 

மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான்கோவிலில் நாளொன்றுக்கு 9ஆயிரத்து 750  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த னர். இதில் 300 ரூபாய் கட்டண பக்தர் கள் 6 ஆயிரம் பேரும், இலவச தரிசன பக்தர்கள் 3 ஆயிரம் பேரும் அடங்குவர். இந்நிலையில் சனிக்கிழமை முதல் கூடு தலாக 3 ஆயிரம் பக்தர்களை அனுமதி க்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் 54 போலீசார் பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட மேலும் 3 போலீசார் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் கொரோ னாவால் உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. 




 

;