tamilnadu

img

வறுமையால் குழந்தையை விற்ற தந்தை... ஊரடங்கால் நேர்ந்த அவலம்

திஸ்பூர்:
வறுமையால் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பிறந்து 15 நாட்களான பச்சிளம் குழந்தையை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை   ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலையின்றி வருமானமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். அரசுகள் அளித்த நிவாரணம் போதுமானதாகவும் இல்லை.அனைவருக்கும் வரவில்லை என்று கொந்தளிப்புடன் கூறுகின்றனர். மத்திய பாஜக அரசு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பொதுத்துறைகளை பெரும் முதலாளிகளுக்கு விற்பதிலும் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச்செய்யும் நடவடிக்கைகளில் மட்டும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கால் மேலும் ஒரு அவலம் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் ஒரு வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் பிரம்மா. இவர், ஊரடங்குக்கு முன்பு குஜராத் மாநிலத்தில்  வேலை செய்து வந்தார். ஊரடங்கைத் தொடர்ந்து சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கு உறவினர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இங்கு எவ்வளவோ முயன்றும் வேலை கிடைக்கவில்லை. வருமானமின்றி வறுமையால் அவதிப்பட்டார்.இதற்கிடையே, கடந்த மாதம் அவருடைய மனைவி இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனால் செலவு மேலும் அதிகரித்ததால், அந்தப் பச்சிளம் குழந்தையை இரண்டு பெண்களிடம் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தார்.இதையறிந்த அவரது மனைவியும் உறவினர்களும் காவல்துறையிடம்  புகார் அளித்தனர். காவல்துறையினர் குழந்தையை மீட்டனர். தீபக் பிரம்மாவையும், குழந்தையை வாங்கிய இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.இதுகுறித்து தீபக் பிரம்மா கூறுகையில், வேலையில்லாமல் வறுமையில் இருக்கும் எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

;