tamilnadu

img

“முத்துப்பட்டன் முதல் முத்தையா வரை” - ஆவணக்குறும்படம்

மனிதம் ஏற்கும் யாரும் ஏற்றுக்கொள்ள முடியா சம்பவங்கள் இந்த நவீன உலகிலும் தொடர்வது கொடுமையே.இக் கொடுமைகளை எதிர்த்து முற்போக்கு ஆதரவு இயக்கங்களையும் இணைத்து நீதிக்காக களம் காண்பது மட்டுமல்லாமல் தகவல்களை திரட்டி ஆவணப்படம் வெளியிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நெல்லை மாவட்டக்குழு. சாதிவெறியர்கள் ஆணவக் கொலை செய்கின்றார்கள் என்றால், இறந்த உடலை வைத்து மீண்டும் மீண்டும் ஆணவப் படுகொலை செய்கின்றது காக்கி உடை அணிந்த சாதி வெறிகொண்ட போலீஸ்.

முத்துப்பட்டன் முதல் முத்தையா வரை  என்ற ஆவணக் குறும்படம் சுமார் 30 நிமி டங்களில் எடுக்கப்பட்டுள்ளது. இதிகாச காலம் முதல் இன்றைய 76 வது சுதந்திர  இந்தியா வரை சாதி ஆணவ படுகொலை கள் நடந்து கொண்டே இருக்கின்றன. கொலையாளிகள் அரசு அதிகாரத்தில் இருக்கும் சாதிவெறியர்களால் காப்  பாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றார் கள் என்பதை சாட்சிகளோடு நிரூபித்துள் ளது இந்த குறும்படம். அல்லாவை தொழுவோரே, மரிய  அன்னையை ஜெபிப்போரே, சிவராமன் அடி யோரே, ஒன்றாக சேருங்கள், மனித நேயம் வளருங்கள் என்ற வில்லுப்பாட்டுடன் குறும்படம் துவங்குகிறது. முத்துப்பட்டனின் காதல்-சாதிமறுப்பு காதல். அவர் ஆணவ படுகொலை செய்யப்  பட்ட சம்பவத்தை தனது வில்லுப்பாட்டி லேயே சொல்கின்றார்கள் கலைமாணி கவி ஞர் வேலவன், சங்கீதா குழுவினர். இதிகாச காலத்தில் அருந்ததியர் சமூ கத்தில் பிறந்த பெம்மக்கா- திம்மக்கா ஆகிய  அக்கா-தங்கை இருவரை, பூநூல் அணிந்து  உச்சிக் குடுமி வைத்துள்ள முத்துப்பட்டன் என்பவர் காதலிக்கிறார். அதிதீவிரமாக காத லிக்கின்றார். தன் காதலை நிரூபிக்க சனா தனத்தின் அடையாளமாக உள்ள தனது உச்சிக் குடுமியையும், பூநூலையும் அறுத்  தெரிகிறார். மேலும், தன் காதலிகளுக்காக செருப்பு  தைக்கும் தொழிலை கற்றுக்கொண்டு தன்  காதலிகளின் காலை அளவெடுத்து, செருப்பு தைத்து கொடுத்து காதலை நிரூ பிக்கிறார்.

சனாதனத்தை இதிகாச காலத்திலேயே உடைத்தெரிந்துள்ளார் முத்துப்பட்டன். ஆனால் சனாதனம்அவரை விட்டு வைக்க வில்லை. வெட்டி வீழ்த்தி சாதி ஆணவ படுகொலை செய்தது.இன்றும் இரத்த சாட்சியாய் இவரது சிலையும், பெம் மக்கா- திம்மக்கா சிலைகளையும், சொரி முத்துசாமி என பெயர் வைத்து கோவில் கட்டி இன்று வரை வழிபட்டு வருகின்றனர் மக்கள் என்பதை காட்சிப்படுத்தியுள்ளது, இந்த குறும்படம். இதிகாசம் முதல் 76 ஆவது சுதந்திர இந்தியா வரை சாதி ஆணவக் கொலைகள்  தொடர்கின்றன என்பதற்கு இரத்த சாட்சி தான் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த  முத்தையா அவர்களின் சாதி ஆணவப்படு கொலை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளார் குறும்பட இயக்கு னரும், ஒளிப்பதிவாளருமான தோழர் தோழன்.ராஜேஷ். திருநெல்வேலி மாவட்டம், திசை யன்விளை அருகில் உள்ள அப்புவிளை கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மகன் முத்தையன் என்பவர் அவர் வேலை செய்  யும் இடத்திலேயே சுபா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தார் தங்களை உயர்சாதி என்று சொல்லிக்கொண்டு முத்தையாவை மிரட்டி யுள்ளனர். தாக்கியும் உள்ளனர். இதன்  தொடர்ச்சியாக சாதி ஆணவபடுகொலையும் செய்துள்ளனர் என்பதை இந்த குறும்படத்  தின் மூலம் மிகத் தெளிவாக, சாட்சியங்களு டன் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர். இந்த சாதி ஆணவப்படுகொலை குறித்து  தகவல் அறிந்து களத்திற்கு சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), ததீஒமு உள்  ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் ஒன்று சேர்ந்து சென்று நீதி கேட்டுள்ளது. இந்த குறும்படத்தில் பேட்டியளித்த ஒவ்  வொருவரின் பேச்சை கேட்கும் போது இந்த கொலை சாதி ஆணவப்படுகொலைதான் என்று நிரூபனமாகின்றது. ஆனால் காவல்  துறை மட்டும் இது சாதி ஆவணபடுகொலை இல்லை என்பதில் உறுதியாக உள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை மாதிரி சாதி ஆணவபடுகொலை மறைத்து தனது சாதி, அதிகார வெறியை நிரூபிக்கின்றது காவல்துறை.

முத்தையாவின் படுகொலையில் கைதா னவர்கள் யாரும் உண்மையான குற்றவாளி கள் இல்லை என்பதையும், யாரை முத்தையா  கிண்டல் செய்தார் என்று காவல்துறை சொல்  கின்றதோ? அந்த பெண்ணே சொல்கின்றார் முத்தையா என்னை கிண்டல் செய்யவில்லை  என்று. கைதானவர்களில் இருவருக்கு முத்  தையா யார் என்றே தெரியாது என்பதுதான்  உண்மை. ஒருவருக்கு மட்டும் தெரியும்.  ஏனென்றால் முத்தையா காதலித்த பெண்  ணின் சாதியை சார்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனா லேயே முத்தையாவின் கொலை வழக்கில் இவரையும் சேர்த்துள்ளனர் காவல் துறை யினர் என்பதை இந்த குறும்படத்தை பார்க்கும் போது தெளிவாக தெரிகின்றது. அருந்ததியர் சமூகத்தை சார்ந்த முத் தையா, தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை காதலித்தார் என்பதற்காக அந்த  பெண்ணின் வீட்டார்கள் சாதி ஆணவப்படு கொலை செய்துள்ளனர். இதை மறைக்க  காவல்துறையில் உள்ள சாதிவெறியும், பண வெறியும் பிடித்துள்ள டிஎஸ்பி, இன்ஸ்பெக் டர், எஸ்ஐ உள்பட சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்கள் போலி கதைகளை உரு வாக்கி முத்தையாவை மீண்டும், மீண்டும்  சாதி அதிகார வெறித் திமிரோடு சாதி  ஆணவப்படுகொலை செய்துள்ளனர். முத்தையாவின் அப்பா, அம்மா, அண் ணன்களிடம் 3 லட்சம் தருகின்றோம் என்று  பேரம் பேசியுள்ளனர் என்பது இந்த குறும் படத்தின் மூலம் தெரியவருகின்றது.

எஸ்சி,எஸ்டி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அதையே மாற்றியுள்ளனர் என்றால் சாதிவெறி கொலைகாரர்களை ஆதரிக்கினற காவலர்கள் காவல்துறையில் நிறைந்துள்ளனர் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது இந்த குறும்படம்.தேசம் முழுவதும் இது தான் நிலை.அதற்கு இக் குறும்படம் ஒரு எடுத்துக்காட்டு. அரசு நிர்வாகம் காவல்துறையில் இருக்கும் சாதிவெறியர்களை களை யெடுக்க வேண்டும். முத்தையாவை சாதி  ஆணவப் படுகொலை செய்த சாதிவெறி யர்களை காப்பாற்றும் பொருட்டு, அவர்கள் கொலை குற்றவாளிகள்தான் என்று தெரிந்  தும் அவர்களை தண்டனையில் இருந்து  தப்பிக்க வைக்க, அவர்களின் குற்றங்க ளுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட, தான் ஒரு டிஎஸ்பி, தான் ஒரு இன்ஸ்பெக்டர் தான் ஒரு சப்இன்ஸ்பெக்டர் என்கிற தங்க ளுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய  தண்டனை சட்டத்தை நன்கு தெரிந்த காவல் துறையினரே அதிகார துஷ்பிரயோகம் செய்  துள்ளனர். தெரிந்தே சாதி ஆணவ கொலை செய்த  குற்றவாளிக்கு துணைபோன டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்ளிட்ட அனைத்து  காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்து எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் கைது செய்ய வேண்டும் என இந்த ஆவணகுறுபடத்தை பார்க்கும்போது அரசுக்கு கோரிக்கையாக வைக்க தோன்றுகின்றது.

நிறைவாக “ தொண்டு செய்து தவத்தி னாலே பிறந்தாரே முத்தையா” என்ற பின்  னணி பாடலோ முத்தையாவின் உடலுக்கு  அஞ்சலி செலுத்துவதையும், பெற்றோர்கள், உறவினர் அழுவதையும் பார்க்கும் போது மனம் கனக்கின்றது. முற்போக்கு அமைப்புகளின் தோழர்கள்  ஒன்றுபட்டு போராடுகின்ற காட்சிகளை பார்க்கும் போது நம்பிக்கை ஏற்படுகின்  றது. முத்தையாவின் சாதி ஆணவப்படு கொலைக்கு நீதி கிடைக்கும், உண்மை குற்ற வாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று  சிபிஐஎம் கட்சியின் நெல்லை மாவட்டச் செய லாளர் தோழர்.க.ஸ்ரீராம் அவர்களின் சமீ பத்திய முகநூல் பதிவை கண்டேன் “முத்தை யாவின் சாதி ஆணவப்படுகொலை வழக்கில்  சம்பந்தமில்லாதவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தவறு என நீதிமன்றம் சுட்டிக்காட்டி, குண்டர்  சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்துள்  ளது. இது வரவேற்கத்தக்கது.

முத்தையாவின் சாதிவெறி ஆணவப்படு கொலைக்கு பிறகு பல சாதிவெறி தாக்கு தல்களும் அதே திருநெல்வேலி மாவட்டத் தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அருந்ததியர் சாதியில் பிறந்து வளர்ந்து அரசு பணியான காவல்துறையில் காவல ராக சேர்ந்து பொருளாதரத்தில் முன்னேறிய  காவலரை வெட்டி படுகொலை செய்கின்றது  சாதிவெறி. காரணம், நீ போலீசாக இந்தா லும் சாதியில் கீழ் சாதிக்காரன் உயர் சாதி யில் பிறந்து வளர்ந்த பெண்னை எப்படி காத லிக்கலாம், கல்யாணம் பன்னலாம், 5 வரு டம் கழித்தல்ல 50 வருடம் ஆனாலும் வெட்டிப் படுகொலை செய்வோம் என உரக்கப்பேசு கிறது சாதிவெறி. அதனைத் தொடர்ந்து அரசு கேபிள் டிவி யில் ஆப்ரேட்டராக பணி செய்யும் இரண்டு  பட்டியல் இன இளைஞர்கள் பணி முடித்து  வீட்டிற்கு செல்லும் வழியில் 6 பேர் மடக்கி  நீங்கள் யார்? என்ன சாதி? என்று கேட்டு பட்டி யல் சாதி என்று சொன்னதும் அவர்களை அடித்து துன்புறுத்தி, நிர்வானப்படுத்தி மூத்தி ரத்தை பெய்துள்ளனர் சாதிவெறியர்கள். தன் கூடப்படிக்கும் மாணவன் வீட்டிற்கு  சென்று கீழ் சாதிக்காரப்பய நல்லா படிக்க லாமா உன்னைபோல நாங்கள் வளரவேண் டுமா என்று சொல்லி வெட்டுகிறார்கள் சக  மாணவர்கள். உயர்சாதிவெறியோடு முத்தை யாவின் படுகொலைக்கு முன்பும் பின்பும் சாதி ஆணவப்படுகொலைகளும், சாதிவெறி  தாக்குதல்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

“முத்துப்பட்டன் முதல் முத்தையா வரை”  என்ற ஆவண குறும்படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியானது “பொய்யான கொலை  வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து என்  கிற செய்தி”. ஆனால் உண்மையான குற்ற வாளிகளை கைது செய்யும் வரை அனை வரிடத்திலும் கொண்டு செல்வோம் இனி யொரு முத்தையாக்கள் சாதி ஆணவப்படு கொலைகள் நடக்காமலிருக்க. சாதிவெறி பிடித்த காவல்துறை அதிகாரிகளில் சிலரின்  ஆணவங்களை ஒழித்துகட்ட சாட்சியாக உள்ளது இந்த குறும்படம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது கட்சி திட்டதில் சாதிய ஒடுக்குமுறை, சாதிய பாரபட்சம் என்ற பிரச்னைக்கு நீண்ட  தொரு வரலாறு உள்ளது. இது முதலாளித்து வத்திற்கு முந்தைய சமூக முறையிலேயே ஆழமாகவே வேரோடிவிட்டது. முதலா ளித்துவ வளர்ச்சிப் பாதையிலான சமூகம் ஏற்கெனவே இருந்த சாதியமுறையுடன் சம ரசம் செய்து கொண்டது. இந்திய முதலாளி  வர்க்கமே கூட இந்த சாதிய வேறுபாடு களை வளர்த்து விடுகிறது. தலித் மக்களில்  மிகப் பெரும் பகுதியினர் உழைக்கும் வர்க்கத்  தின் பகுதியாக உள்ள நிலையில், சாதிய முறைக்கும், தலித் மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கும் எதிரான ஒற்றுமை, உழைக்கும்  மக்களின் ஒற்றுமையே ஆகும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதியமுறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்”என்று தனது  கட்சி திட்டத்தில் கூறியள்ளது.

இதன் வழிகாட்டுதல்படி திருநெல்வேலி கட்சி மாவட்டக்குழு முத்தையாவின் சாதி ஆணவ படுகொலையை கண்டிப்பதோடு மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு சமூக  சீர்திருத்த இயக்கங்களோடும், முற்போக்கு  ஜனநாயாக சக்திகளோடு இணைந்து  தொடர்ந்து தனது களப் போராட்டத்தை  நடத்திக் கொண்டு இந்த ஆவண குறும் படத்தையும் வெளியிட்டுள்ளது என்பதை பார்க்கும் போது பெருமகிழ்ச்சியாக உள் ளது. படுகொலையான முத்தையாவின் குடும்பத்திற்கு நிச்சியம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. எனவே, முத்துப்பட்டன் முதல் முத்தையா  வரை என்ற ஆவண குறும்படத்தை வெளி யிட்டுள்ள சிபிஐஎம் கட்சிக்கும், இயக்கு னரும், ஒளிப்பதிவாளருமான தோழர் தோழன் ராஜேஷ் அவர்களுக்கும், நீதிக்காக  போராடிக்கொண்டு இருக்கின்ற அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் நன்றிகள். சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்  திட சிறப்பு சட்டம் இயற்றிட போராடுவோம் சாதியம் தகர்ப்போம் மனிதம் வளர்ப் போம்.

- மு.முனிச்செல்வம் இ.க.இ.ச., (BABL), வழக்குரைஞர், தமுஎகச - செங்கல்பட்டு.

 

;