tamilnadu

img

முற்றிலுமாக முடங்கிப் போன இந்திய சேவைத்துறை வளர்ச்சி... ஏப்ரலில் வெறும் 5.4 புள்ளிகளாக சரிந்தது

புதுதில்லி:
கொரோனா தாக்கம் காரணமாக, இந்தியாவில் 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்குஅமலில் உள்ளதால், நாட்டில் உற்பத்தி சார்ந்த தொழிற்துறை ஏப்ரல் மாதத்தில் கடும்சரிவைச் சந்தித்தது.மார்ச் மாதத்தில் 51.8 புள்ளிகளாக இருந்த பிஎம்ஐ குறியீடு, கொரோனா தாக்கம்மற்றும் ஊரடங்கு அமலுக்குப் பிறகு ஏப்ரலில் 27.4 புள்ளிகளாக குறைந்தது.இந்நிலையில், சேவைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ‘ஐ.எச்.எஸ். மார்கிட்’ (IHS Markit) நிறுவனம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், மார்ச்மாதத்தில் சேவைத் தொழில் குறியீடு 49.3இருந்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 5.4 புள்ளிகள் அளவிற்கு மிக மோசமான அளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சிஎன்றும் குறிப்பிட்டுள்ளது.

“உற்பத்தித் துறையையும், சேவைத் துறையையும் ஒருங்கிணைத்து கணக்கிடப் படும் பிஎம்ஐ குறியீடு, மார்ச் மாதத்தில் 50.6 புள்ளிகளாக இருந்தது. இதுவும் ஏப்ரல்மாதத்தில் 7.2 ஆக குறைந்து விட்டது. வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை,ஊழியர்களுக்கான தேவை குறைந்துள்ளதால் இரண்டாம் காலாண்டில் பல சேவைநிறுவனங்கள் ஆள் எடுப்பதையே நிறுத்திவிட்டன” என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

;