tamilnadu

img

வலைப்பதிவு : இவங்கநேர்மை எனக்குபிடிச்சிருக்கு....

இராமர் கோவில் விழாதொடர்பாக பிரியங்காகாந்தி நிலைபாடு குறித்து நான் அதிர்ச்சி அடைய வில்லை. நீங்களும் அதிர்ச்சிஅடையக்கூடாது. மதச்சார்பின்மை குறித்து காங்கிரசுக்குஒரு உறுதியான நிலைபாடு இருந்திருந்தால் இந்த தேசம்இன்று சந்திக்கும் மோச மான சூழல் உருவாகியே இருக்காது.

இராமர் கோவில் பூஜை / காங்கிரஸ் நிலைபாடு குறித்து பினராயி விஜயன்

-------------------

இன்று மகாத்மா காந்திஉயிரோடு இருந்திருந்தால் அயோத்தி பூமிபூஜையில் அரசியல்வாதி களின் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கமாட்டார். அவர் தெற்கு கஷ்மீரில் தனிஅரசியல்வாதியாக ஆனால்
மக்களுடன் நடந்து கொண்டிருப்பார். “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என முணு முணுத்து கொண்டிருப்பார்.

பத்திரிக்கையாளர்  சகாரிகா கோஷ்

------------------

மிகச்சிறந்த நீதி அரசர் களான ஓ.சின்னப்ப ரெட்டி/ டி.ஏ.தேசாய்/ சந்திரசூட் ஆகியோர், ஷா பானு வழக்கில் அளித்த தீர்ப்பை ராஜீவ் காந்தி ஏற்றுகொண்டி ருந்தால் அல்லது 1989ல் பாபர் மசூதி வாயில்களை திறந்து செங்கல் பூஜையை அனுமதிக்காமல் இருந்திருந்தால் ஒரு வேளை இராமஜென்மபூமி இயக்கமே உருவாகாமல் போயிருக்கலாம். அந்த பெருமை ராஜிவ்காந்திக்கு! இன்று சோனியாகாந்தியும் பிரியங்கா காந்தி யும் அந்த பாரம்பர்யத்தை தொடர்கின்றனர்.பத்திரிக்கையாளர்கள் ஷிவம் விஜ் மற்றும் எம்.கே.வேணுஅயோத்தி பூமி பூஜையின் பொழுது தமிழகத்தில் ராவணனை புகழ்ந்துடிவிட்டர் டிரெண்ட் ஆனது.இதனை தொடர்ந்து ராவ ணன் பிராமணர் எனவும் ஏன் பிராமணரை தமிழர்கள் கொண்டாடுகின்றனர் என வும் சிலர் ‘பதிலடி’ என்ற பெயரில் பதிவிட்டுள்ளனர்.ராவணன் பிராமணர் எனில் அவரது தங்கை சூர்ப்பநகை எப்படி அரக்கியாக இருக்கஇயலும்? அது சாத்தியமா? பிராமணரான ராவணனை விட்டுவிட்டு, ஏன் சத்திரிய ரான ராமரை பிராமணர்கள் வழிபட வேண்டும்? அல்லது இதுவும் வழக்கம் போல ஒரு நாடகமா?

பத்திரிக்கையாளர்  லட்சுமி சுப்பிரமணியன் 

---------------

மீன்கடைல கூட்டம்னா திட்டுறாய்ங்க.. ராமஜென்ம பூமி பூஜைனா விழாக்கோலம்னு சொல்லுறாங்க.

உகதி சித்தன்

-----------

“புதிய கல்வி கொள்கை யால் கூலிக்கு, ராணுவத்திற்கு ஆட்கள் கிடைப்பார்கள்”: சங்கிகள். இவங்கநேர்மை எனக்குபிடிச்சிருக்கு!

அருணன்

“சமஸ்கிருதம் ஒரு முக்கியமான நவீன மொழி”: புதிய கல்வி கொள்கை. மனுதர்ம சாஸ்திரம் போன்ற அதர்மசாஸ்திரங்கள் அதில் இருப்பதால் கூறுகிறார்களோ? “இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் இல்லை”: பாஜக தலைவர். பிறகு ஏன் மும்மொழி களில் இரண்டு இந்தியமொழிகளாக இருக்க வேண்டும் என்கிறீர்கள்? ஏன் அதில் குறிப்பாக சமஸ்கிரு தத்தை முன்மொழிகிறீர்கள்?

அருணன்

$$$$$$$$$$$$$

தொகுப்பு, அ.அன்வர் உசேன்

;