tamilnadu

img

புத்த சுற்றுலா தலங்களில் சீன மொழியில் விளம்பரம்...

புதுதில்லி:
இந்தியாவிலுள்ள புத்த சுற்றுலாத் தலங்களில், சீன மொழியில்விளக்கங்கள், வரைபடங்கள் அமைக்க வேண்டும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கூறியுள்ளார்.

புத்த சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் நடத்திய‘‘எல்லை தாண் டிய சுற்றுலா’’ என்ற இணையக்கருத்தரங்கில், பிரகலாத் சிங் படேல் பேசியுள்ளார்.அதில், “புத்தரின் பூமியாக இந்தியா இருந்தும், புத்தமத பாரம்பரிய இடங்கள் அதிகளவில் இருந்தும், இங்கு புத்த யாத்ரீகர்கள் குறைந்த அளவே வருகின்றனர். இதற்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கேற்ப சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

நாட்டில் உள்ள முக்கிய புத்தமத தலங்களில், சீனமொழி உட்பட சர்வதேச மொழிகளில் விளக்கங்கள், வரைபடங்கள் இடம் பெற வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத், குஷிநகர் மற்றும் சரவஸ்திஉட்பட 5 புத்த தலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். சாஞ்சிக்கு அதிகளவில் இலங்கை சுற்றுலாப் பயணிகள் வருவதால், அங்கு சிங்கள மொழியில்விளக்கங்கள் இருக்க வேண்டும்” என்று பிரகலாத் படேல் கூறியுள்ளார்.

;