tamilnadu

img

பாத்திர தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்க தொழிற் சங்க கூட்டுக் குழு கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர், ஜன.4- திருப்பூர் வட்டார பாத்திர தொழிலா ளர்களுக்கு நியாயமான முறையில் கூலி  உயர்வு வழங்க வேண்டும் என பாத்திர  தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் கமிட்டி  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. திருப்பூர், அடுத்த அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், அங்கேரிபாளையம், காளம்பாளையம், அம்மாபாளையம், பெரி யார் காலனி உள்ளிட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இங்கு எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன் றுக்கு, ரூ.50 லட்சம் மதிப்பிலான பாத்தி ரங்கள் உற்பத்தியாகின்றன. இதை நம்பி, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் உள்ளனர். பாத்திர தொழிலா ளர்களுக்கு, மூன்றாண்டுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 2016ல் கையெழுத்தான ஒப்பந்தம், 2019 டிச.31 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.  இந்நிலையில், பாத்திர தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக் கூட்டம், அனுப்பர்பாளையத்தில் உள்ள தொமுசங்க அலுவலகத்தில் வெள்ளியன்று நடந்தது. இக்கூட்டத்திற்கு முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில்,  வருகிற 11ம் தேதி புதிய கூலி உயர்வு கோரிக்கை  குறித்து எவர்சில்வர் பாத்திர உற்பத்தியா ளர்கள் சங்கம் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கு கடிதம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு 60 நாட்கள் போராட் டம் நடத்திய பிறகே ஒப்பந்தம் ஏற்பட் டது. அதுபோன்று நடைபெறாமல், சுமூக மாக பேசி, நியாயமான முறையில் கூலி  உயர்வை வழங்க பாத்திர உற்பத்தியாளர் கள் முன் வர வேண்டும். இதற்கு அரசு சார்பி லும் உதவ வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் தேவராஜ், கண்ணபிரான் (ஏடிபி), ரங்கராஜ், குப்புசாமி (சிஐடியு), வேலுச் சாமி, தர்மலிங்கம் (எல்பிஎப்), செல்வராஜ், நாகராஜ் (ஏஐடியுசி), திருஞானம், பாண்டியராஜன் (எச்எம்எஸ்), காமாட்சி அம்மன் பாத்திர சங்கம் அர்ஜீனன், செந்தில் (பிஎம்எஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

;