tamilnadu

img

பாகிஸ்தானிலிருந்து மாற்றம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் 

டென்னிஸ் உலகில் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு அடுத்து முக்கிய தொடராகக் கருதப் படும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியா -பாகிஸ்தான் அணி கள் மோதும் ஆட்டங்கள் பாகிஸ்தா னின் தலைநகரான இஸ்லாமாபாத் தில் வருகிற 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடப்பதாகத் திட்டமிடப் பட்டிருந்தது.  புல்வாமா, காஷ்மீர் என இரண்டு முக்கியமான பிரச்சனையால் இந்தியா  - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் இஸ்லாமாபாத்தில் நடை பெறவிருக்கும் டேவிஸ் கோப்பை தொடருக்குப் பாதுகாப்பு அளிப்பது சவாலான விசயம் என்பதால், டேவிஸ் கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்றி பொதுவான இடத்தில் நடத்துமாறு இந்திய டென்னிஸ் சங்கம், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்திற்குக் கோரிக்கை வைத்தது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சர்வதேச டென்னிஸ் சம்மேளனம்   பொதுவான இடத்தில் நடைபெறும் எனவும் போட்டி நடை பெறும் இடம் பின்னர் அறிவிக்கப் படும் என அறிக்கை அளித்துள்ளது. 
 

;