tamilnadu

img

சர்வதேச நீச்சல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற நடிகர் மாதவன் மகன்!

சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் கலந்துகொண்டுள்ளார். 
1,500 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் கலந்துகொண்ட வேதாந்த், மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் மாதவன், ‘வேதாந்த் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றுள்ளான். இது சரிதாவுக்கும் எனக்கும் பெருமையான தருணம். அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

;