tamilnadu

img

சட்டப்பேரவையில் திமுக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்....

சென்னை:
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத் திற்குபிறகு, முழுமையான நிதிநிலை அறிக்கை பெருத்த எதிர்ப்பார்ப்புகளிடையே தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித் தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ஆம் தேதி பதவி ஏற்றார்.அதன் பிறகு, 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்  ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். மூன்று நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெற்றது.சில தினங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆக.13 அன்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் இம் மாதம் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால், சட்டப்பேரவையில் மேற்கொள்ளப்படும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வியாழனன்று(ஆக.12) ஆய்வு செய்தனர்.

;