tamilnadu

img

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

இரண்டு மாதங்களுக்கு பின் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ25 உயர்த்தப்பட்டுள்ளது. 
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப  சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில் இன்று மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தலைநகர் தில்லியில் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு ஒரு உருளை ரூ.834.50 ஆகவும், 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.76 உயர்த்தப்பட்டுள்ளதால் ரூ.1,550 -ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக  வேலைஇழப்பு போன்ற காரணங்களால் மக்கள் தவித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 -ஐ கடந்துள்ளது. தற்போது சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டிருப்பது தற்போது மோடி அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

;