states

img

வணிக சிலிண்டர் விலை ரூ102.50 குறைப்பு

வணிக சிலிண்டரின் விலையை ரூ.102.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று சனிக்கிழமை முதல் தில்லியில் 19 கிலோ எடை கொண்ட  வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.102.50 குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு எரிவாயு உருளையின் விலை ரூ.1,998.50 ஆக இருக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய விலைக் குறைப்பைத் தொடர்ந்து 19 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளையின் விலை தில்லியில் ரூ.2,101 இல் இருந்து ரூ.1,998.50 ஆக இருக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் எரிவாயு உருளையின் விலை மாதந்தோறும் திருத்தி அமைக்கப்படுகிறது. முன்னதாக அக்டோபர் 1 ஆம் தேதி 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43 உயர்த்தப்பட்டது, அக்டோபர் 6ஆம் தேதி 19 கிலோ வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளையின் விலை ரூ.2.50 குறைக்கப்பட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி 19 கிலோ எரிவாயு உருளையின் விலை ரூ.75 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

;