states

12 மாநிலங்கள் ; 94 தொகுதிகள் இன்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு

18ஆவது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 16 அன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அறிவிப்பின்படி முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19 அன்றும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளுக்கும் ஏப். 26 அன்று வாக்குப்பதிவும் நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக அசாம் (4), பீகார் (5), சத்தீஸ்கர் (7), கோவா (2), குஜராத் (26), கர்நாடகா (14), மத்தியப்பிரதேசம் (9), மகாராஷ்டிரா (11), உத்தரப்பிரதேசம் (10), மேற்கு வங்கம் (4) ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ (2), ஜம்மு-காஷ்மீர் (1) ஆகிய 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு செவ்வாயன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

;