articles

img

ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட ரயில்வே போராட்ட பொன்விழா - வி.ஹரிலால்

4 லட்சம் தற்காலிக ஊழியர்கள் உட்பட 17 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வேலை நிறுத்தப் போராட்டம் 1974 மே 8 முதல் 27 வரை நடைபெற்றது. இந்திய ரயில்வேயை ஸ்தம்பிக்க வைத்த இந்த 20 நாள்  போராட்டத்தில் டிஆர்இயு உள்ளிட்ட 130 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர். அந்தப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டை 8.5.2024 அன்று பொன்மலையில் டிஆர்இயு-வின் மத்திய சங்கம் கொண்டாடுகிறது; போராட்ட வீரர்களை கௌரவிக்கிறது.

வேலை நிறுத்தக் கோரிக்கைகள்

ரயில்வே ஊழியர்களை ஆலை  ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், எட்டு மணி நேர வேலையை உத்தரவாதம் செய்ய வேண்டும், பாதுகாப்பற்ற வேலைச் சூழலோடு அல்லல்படும் தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். கொடுபடா சம்பளமாக 8.33 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் போன்ற நியாய மான கோரிக்கைகளுக்காக அந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. 1973 ஆம் ஆண்டு ஓடும் தொழிலாளர்கள் போராட்டம் உட்பட 75க்கும் மேற்பட்ட போராட்டங்கள் இதற்கு முன்பு நடந்த துண்டு. இருந்தாலும் 130 க்கும் மேற்பட்ட சங்கங்க ளை ஒன்றிணைத்து நடந்த முதல் போராட்டம் 1974 வேலைநிறுத்தப் போராட்டமாகும்.

 வேலைநிறுத்த தயாரிப்புகள்

திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் காரணமாக 1970 ஆம் ஆண்டு சிஐடியு உருவாக்கப் பட்டது. 1973 ஆம் ஆண்டு  எச்எம்பி சங்கத்தின் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒருங்கிணைப்பாளராகவும் சிஐடியுவின் பி.ராமமூர்த்தி தலைவராகவும் கொண்ட தொழிற் சங்கங்களின் ஐக்கிய கவுன்சில் (UCTU) உருவாக்கப் பட்டது. சிஐடியுவின் உதவியோடு ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏஐ ஆர்எப் தலைவரானார். இது ரயில்வே ஊழியர்கள் மத்தி யில் நம்பிக்கையும் உத்வேகமும் பெற உதவியது.  ஒன்றுபட்ட வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுக்கு டிஆர்இயு கடிதம் எழுதியது. 1974 பிப்ரவரி 13,14 தேதிகளில் சென் னையில் 120க்கும் மேற்பட்ட சங்கங்களின் மாநாடு நடை பெற்றது. டிஆர்இயுவின் முன்னாள் பொதுச் செயலா ளர் பி.வி.ராமதாஸ், சிஐடியு தலைவர் உமாநாத் ஆகியோர் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தின் தேவை குறித்த உமாநாத்தின் எழுச்சி மிகு பேச்சு ஒற்றுமையைப் பறைசாற்றியதோடு தில்லி யில் நடக்கும் கருத்தரங்கில் பங்கெடுக்க அனைத்து சங்கங்களையும் ஒத்துக் கொள்ள வைத்தது.

ஜார்ஜ் பெர்னாண்டஸ், சமர்முகர்ஜி

1974 பிப்ரவரி 22 அன்று தில்லியில் 110க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்களின் கருத்தரங்கம் நடை பெற்றது. ஏஐஆர்எப்-பின் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிஐடியு வின் சமர் முகர்ஜி போன்றவர்களை கொண்ட ரயில்வே ஊழியர்களின் போராட்டத்திற்கான தேசிய ஒருங்கி ணைப்புக் குழு (NCCRS) உருவாக்கப்பட்டது. அந்த குழு மே எட்டு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என அறிவித்தது. தெற்கு ரயில்வேயில் டிஆர்இயு தலை வர்கள் அனந்தன் நம்பியார், பி.வி.ராமதாஸ் வேலை நிறுத்தத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்தனர். ஆனால் மே 2 அன்று நிர்ணயித்த பேச்சு வார்த்தைக்குச் சென்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ், சமர் முகர்ஜி உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்ட னர். இதை அறிந்து ஆத்திரமடைந்த ரயில்வே தொழிலாளர்கள், பல பகுதியில் மே இரண்டாம் தேதி முதலே வேலை நிறுத்தத்தை துவங்கினர்.

 ஆதரவு இயக்கங்கள்

ஐஎன்டியுசி மற்றும் அதன் இணைப்பு சங்கங்க ளான என்எப்ஐஆர், எஸ்ஆர்இஎஸ் தவிர அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்தன. ஐஎன்டியுசி, என்எப்ஐ ஆர், எஸ்ஆர்இஎஸ் ஆகியவை வேலை நிறுத்தத்தை உடைக்க கருங்காலி சங்கங்களாக செயல்பட்டன. ரயில்வே வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தபால் ஊழியர்கள் மே 10 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். சிஐடியு தலைமையிலான மத்திய தொழிற் சங்கங்கள் மே 15 அன்று வேலை நிறுத்தத்திற்கு ஆதர வாக ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். மதுரை யில் கருங்காலி ஓட்டுநர் இயக்கிய ரயிலை இயங்கா மல் தடுக்க ராமசாமி என்கிற சாதாரண விவசாயத் தொ ழிலாளி ரயில் முன் பாய்ந்து தன்னுயிரை நீத்தார்.

அடக்கு முறை கட்டவிழ்ப்பு

அன்றைய ஒன்றிய அரசு  வேலை நிறுத்தத்தை ஒடுக்க அனைத்து அடக்குமுறைகளையும் கட்ட விழ்த்து விட்டது. ராணுவத்தையும் துணை ராணுவ படைகளான பிஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப்-ஐயும் வேலை நிறுத்தத்தை ஒடுக்க பயன்படுத்தியது. 50,000 ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். தற்காலிக ஊழியர்கள் உட்பட 57,569 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. 6,279 ஊழியர்களை இடை நீக்கம் செய்தது. 30,000 ரயில்வே ஊழியர்களை  ரயில்வே குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தியது. ரயில்வே குடியிருப்புகளின் மின்சார மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டித்தது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை போலீசை வைத்து மிரட்டியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒரு ஊழி யரின் மகளின் திருமணத்தை நடக்க விடாமல் இருக்க போலீஸ் எடுத்த முயற்சியை முறியடித்து தோழர் ஏ.கே.கோபாலன் மற்றும் சுசிலா கோபாலன் தலையிட்டு திருமணத்தை நடத்திக் கொடுத்தனர்.

அரசியல் மாற்றம்  ஏற்படுத்திய வேலை நிறுத்தம்

அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு ரயில்வே வேலை நிறுத்தத்தை ஓடுக்கிய பின்பு 1975 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்து பிரதமர் இந்திரா காந்தி அனைத்து தொழிற்சங்கம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கும் வேட்டு வைத்தார். ஆனால் அதன் பின்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி தோற்கடிக்கப்பட்டு, ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மது தந்தவதே ரயில்வே அமைச்சரானார். உடனடி யாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களையும் மீண்டும் ரயில்வே பணியில் அமர்த்தினார். அனைத்து பழிவாங்கல் நடவடிக்கைகளையும் ரத்து செய்தார். 

சிபிஎம் முயற்சியால் போனஸ் அறிவிப்பு

அதன் பிறகு வந்த அரசியல் மாற்றத்தின் காரண மாக சரண்சிங் பிரதமராக விரும்பினார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை நாடினார். ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்வைத்தது. அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு சரண்சிங் பிரதமரானார். ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தார். அதன் பிறகு தான் படிப்படியாக ரயில்வே போராட்டத்தை ஒடுக்க பயன்படுத்திய ஆர்பிஎப் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய  அரசு ஊழியர்களுக்கும் போனஸ் கிடைத்தது. ஒன்றுபட்ட போராட்டங்களை ஒடுக்குகின்ற எந்த அரசாக இருந்தாலும் இறுதியில் தூக்கி எறியப்படும் என்பதுதான் 1974 வேலை நிறுத்தப் போராட்டத்தின் படிப்பினை. ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்று கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கிற மோடி தலைமை யிலான பாஜக ஒன்றிய அரசு. அதனால் இன்றைய சூழ லில் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டங்க ளின் தேவை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

கட்டுரையாளர்: பொதுச் செயலாளர், 
 தட்சிண ரயில்வே எம்பிளாயீஸ் யூனியன் (டிஆர்இயு)






 

;