tamilnadu

img

விவசாயிகளின் விடிவெள்ளி தோழர்  ஜி.வீரய்யன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம்

இல்லாத வீடு, கட்டாத கழிப் பறை, போடாத சிமெண்ட் சாலை, மடிக்காத வரப்பு, பாசாகும் பில், இறந்த நபருக்கும் ஊதியம் என பல ஊழல்கள் புதிதாக உருவெடுத்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் நடைபெற்றுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். ஆதனூர் ஊராட்சியில், ஆத னூர், கிளாப்பாளையம், பாச்சாப் பாளையம் ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கியது. ஊராட்சி செய லாளராக சுஜாதா என்பவர் வேலை  செய்கிறார். இவருடைய கணவரும்  வேறு கிராமத்தில் ஊராட்சி செய லாளராக பணிபுரிந்து வருகிறார். ஊராட்சி மன்றத் தேர்தல் நடை பெறாத காரணத்தால் ஊராட்சி மன்ற  செயல் தலைவர் போல் மேற்படி சுஜாதா செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

ஊராட்சிக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகளில் சுஜாதா மற்றும் ஊராட்சியில் 100  நாள் வேலை திட்டத்தின் பணித்தள  பொறுப்பாளராக செயல்பட்ட முரு கன் என்பவரது உறவினர்களுக்கு பல வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில வீடுகள் கட்டப்படா மலேயே வேறு நபர்களின் வீடுகள் காட்டப்பட்டு தலா 1 லட்சத்து 20 ஆயி ரம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளது.  அதேபோல் முருகனின் தம்பி லட்சுமணன் பெயரில் வரப்பு மடித் தல் பணி செய்யப்படாமலேயே 90  ஆயிரம் ரூபாய் பில் தொகை ஒப்பு தல் அளிக்கப்பட்டு வழங்கப்பட்டுள் ளது. மேலும் முருகன், அவரின் தந்தை சிங்காரம் பெயரிலும் வரப்பு மடித்தல் பணி செய்யப்பட்டதாக பணம் பெறப்பட்டுள்ளது. அதேபோல் அய்யம்மாள் என்ப வரின் பெயரில் 2014-15, 2015-16,  2016-17இல் கழிப்பிடம் கட்டுவ தற்கான தொகை தொடர்ந்து 3 ஆண்டுகளாக தலா 12 ஆயிரம் ரூபாய் ஒப்புகை அளிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆதனூர் தலித் பகுதியில் சிமெண்ட் சாலை  அமைக்கப்பட்டதாகக் கூறி 3 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

100 நாள் வேலையில் பணித்தள  பொறுப்பாளராக செயல்பட்ட முரு கனுடைய தாய், தந்தை, சித்தி, தம்பி  என அவருடைய உறவினர்கள் குடும்பத்திற்கு கூடுதலான நாட்கள்  வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு அல்லது வேலை செய்ததாக கணக்கு காட்டப்பட்டு பணம் எடுக்கப்  பட்டுள்ளது. உதாரணமாக முரு கனின் தங்கை மஞ்சுளா என்பவர் திருமணமாகி திண்டுக்கல் நகரில்  வசித்து வரும் நிலையில் இப்போ தும் இங்கே 100 நாள் வேலையில் ஊதியம் பெற்று வருவதாக கணக்கு  எழுதப்பட்டுள்ளது. இவரது உற வினர்கள் சாமுண்டீஸ்வரி முருகே சன் குடும்பத்திற்கு 2019ஆம் ஆண்டில் மட்டும் 90 நாட்கள் இது வரை வேலை தந்ததாக ஆவ ணத்தில் பதியப்பட்டுள்ளது. பிற குடும்பத்தினருக்கு 15 நாட்கள் 20  நாட்கள் என மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. 

இதைவிட நூதன ஊழல் என்பது  இவ்வூரில் வசித்த ஆசைத்தம்பி என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். ஆனால் 2019 அக்டோபர் மாதத்தில்  கூட இவர் வேலை  அட்டையின் மூலம் வேலை செய்து பணம் பெற்ற தாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகனிடம் கேட்டால் அவர் கர்ணனின் தம்பியாக மாறி இறந்தவர் குடும்பம் பிழைக்கட்டும் எனக் கூறுகிறாராம். ஏழை, எளிய மக்கள் பிழைப்  பிற்காக ஊரைவிட்டு வெளியே  செல்வதை தடுத்திட இடதுசாரி களின் முயற்சியால் கொண்டுவரப் பட்ட கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின் பயனாக குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க முடிந்  தது. ஆனால் ஆளும் அரசியல்வாதி களும், உள்ளூர் ஆதிக்க சக்திகளும்,  அதிகார வர்க்கமும் கூட்டு சேர்ந்து கொண்டு மஸ்டர் ரோல் உள்ளிட்ட ஊழல்கள் மூலம் இந்த திட்டத்தை சீரழிக்க முனைகின்றனர். ஊழல் களை கலைந்து நூறு நாள் வேலைத்திட்டத்தை பாதுகாத்திட தொடர்ந்து இடதுசாரி அமைப்பு கள் போராடி வரும் நிலையில் தமி ழகம் முழுவதும் இத்திட்டத்தில் நடை பெறும் ஊழல்களுக்கு “ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்” என்ப தற்கான எடுத்துக்காட்டாக ஆத னூர் விளங்குகிறது.  விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை ஏராளமான முறை கேடுகள் ஆதாரத்துடன் அம்பலப் படுத்தபட்டாலும் ஆதனூர் ஊராட்சியை பொருத்த அளவில் அதற்கு உட்பட்ட மூன்று கிராமங்க ளில் நடைபெற்றுள்ள முறைகேடு களை ஆராய்வது என்பது “மணல்  சோற்றிலே கல் ஆய்வது போல”த்தான் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து அதிகாரிகள் மூலம்  ஆட்சி நடத்தும் தமிழக அரசும், இதனை சாதகமாக்கி உள்ளூர் பிர முகர்களோடு கைகோர்த்துக் கொண்டு ஊழலில் ஈடுபடும் அதிகாரி களும், சில ஊழியர்களும்தான் மக்கள் பணம் கொள்ளை போக முழு  காரணம். இனியாவது முறைகேடு களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்ப டுமா?     

;