tamilnadu

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்...

சென்னை:
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண் ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,  தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாண்டும் இவ்விருது 15.8.2021 சுதந்திர தினத் தன்று வழங்கப்பட உள்ளது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கிய “முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கான” விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்கள் தமிழ் நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் இணைய தளமான http://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண் ணப்பிக்க கடைசி நாள் 30.6.2021 மற்றும் நேரம் மாலை 5 மணியாகும்.

;