tamilnadu

ஆசிரியருக்கு ஒரு நீதி, நீதிபதிக்கு ஒரு நீதியா? ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் ஆவேசம்

கோவை, மே 4-ஆசிரியர்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என தமிழக தொடக்கபள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுசெயலாளர் மீனாட்சிசுந்தரம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களை் சந்தித்த அவர்கூறுகையில், தமிழக அரசு ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசு 2009 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் தகுதிதேர்வில் கட்டாயம் வெற்றி பெறவேண்டும் என கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வந்தது. அந்தசட்டத்திலேயே ஆண்டுதோறும்தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2011, 13,17 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே தேர்வு நடத்தி இருக்கிறது. ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படாமல் திடீரென ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் இருக்கக்கூடாது என்றும், இந்த மாதம் சம்பளம் இல்லை எனக்கூறி 1500 ஆசிரியர்களை உயர் நீதிமன்றம் பழிவாங்கி இருக்கிறது. தொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர்களை பழிவாங்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பணியிறக்கம், தகுதி குறைப்பு, அவமானப்படுத்துதல், இடமாற்றம், கொலை செய்ய முயற்சி, வாகனங்கள் சேதம் உள்ளிட்ட பொய் வழக்குகளை போட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கைகளை ரத்து செய்யாமல் தமிழக அரசு தேர்தலை சந்தித்திருக்கிறது. தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் ஆசிரியர் பணியாளர்கள் 5.5லட்சம் பேரில் பாதிப்பேருக்குத்தான் தபால் ஒட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற மாவட்ட நீதிபதிக்கான தேர்வில் கீழமை மற்றும் முன்சீப்உள்ளிட்ட நீதிபதிகள் பதவி உயர்வுக்காக தேர்வு எழுதியதில், ஒருவர் கூட தேர்ச்சி பெறாத நிலையில் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆசிரியருக்கு ஒரு நீதி, நீதிபதிக்குஒரு நீதியா என அவர் கேள்விஎழுப்பினார். தமிழக அரசு ஆசிரியர்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் கல்விபாதிக்கப்படாமல் தேர்தல் முடிவுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை எனில், ஜக்டோ ஜியோசார்பில் வழக்கும், போராட்டமும்தொடரும் என தெரிவித்தார்.

;