tamilnadu

img

வி.முரளீதரன் மத்திய அமைச்சராக தொடர்ந்தால் தங்கக் கடத்தல் விசாரணை சீர்குலையும... : டிஒய்எப்ஐ

திருவனந்தபுரம்:
வி.முரளீதரன் மத்திய வெளிவிவகார அமைச்சராக இருக்கும் வரை தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை முறையாகமுன்னேறாது என்று டிஒய்எப்ஐ மாநில செயலாளர் ஏ.ஏ. ரஹீம் தெரிவித்தார். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வாக்கு மிக்கவர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

என்ஐஏ முரளீதரனின் பெயரை சொல்லாமல் சொல்லியிருக்கிறது. ‘இந்தியாவில் விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்தப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வாக்குமிக்க தலைவர்கள் இந்த மிகப்பெரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்; முரளீதரனின் பங்க பற்றி இதை விட எவ்வாறு சிறப்பாகச் சொல்ல முடியும்’ என்று ரஹீம் கேட்டார்.

சுங்க அதிகாரிகள் ஏன் நாடு கடத்தப்படுகிறார்கள்? பைசல் பரீதையுஏஇயிலிருந்து கொண்டுவருவதற்கு வெளியுறவு அலுவலகம் ஏன்முன்முயற்சி எடுக்கவில்லை?. அட்டாச்சே ஏன் எந்தக் குற்றமும்செய்யவில்லை என்று ஒருதலை பட்சமாக துவக்கத்திலேயை வி.முரளீதரன் கூறினார்? தூதரக பார்சலில் அல்ல தங்கம் கொண்டுவரப் பட்டது என்று ஏன் மீண்டும் மீண்டும்வி.முரளீதரன் கூறுகிறார்? அனில் நம்பியார் மூலம் இதற்காக ஒரு ஆவணத்தை துணைத் தூதரகம் உருவாக்க தலைமை தாங்கினார்.தேசிய பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும் தங்கக் கடத்தலில்முரளீதரனும் பாஜகவும் முன்னணியில் உள்ளனர் என்பதற்கு இது ஒருதெளிவான எடுத்துக்காட்டு. வி முரளீதரன் ராஜிநாமா குறித்து யுடிஎப்ஏன் மவுனம் காக்கிறது? முக்கியகுற்றவாளிகள் சுங்க வழக்கில் ஜாமீன் பெறுகின்றனர். மத்திய அரசின் தலையீடும் உயர் மட்டத்தினரின் ஆதரவும் இல்லாமல் எவ்வாறுஜாமீன் பெற முடியும் என்று ரஹீம்கேட்டார். வி.முரளீதரன் ஆரம்பத் தில் இருந்தே விசாரணையை சீரழிக்க முயற்சித்து வருகிறார். முரளீதரன் ஒரு நிமிடம் கூட காலம்கடத்தாமல் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ரஹீம் கூறினார்.

;