india

img

செவிலியர்கள் தாய்மொழியில் பேசுவதற்கு தடைவிதித்த தில்லி ஜிப்மர் மருத்துவமனை.... கடும் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்....

புதுதில்லி:
செவிலியர்கள் தாய்மொழியில் பேசுவதற்கு தடை விதித்த தில்லி அரசு ஜிப்மர் மருத்துவமனையின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

தில்லியில் ஜி.பி.பந்த் (ஜிப்மர்) அரசு மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த மருத்துவமனையில், ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே அலுவலகமொழியாக உள்ளது. இதனிடையே, மருத்துவமனை நோயாளி ஒருவர் சுகாதாரத்துறையின் மூத்தஅதிகாரிக்கு புகார் ஒன்றை அளித்தார். அதில், ஜிப்மர் மருத்துவமனையின் அலுவலக மொழியாக ஆங்கிலம், இந்தி இருக்கும்போது, சில செவிலியர்கள் மலையாளத்தில் பேசுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார். 

இதனைத்தொடர்ந்து மருத்துவ மனை சார்பில் வெளியிடப்பட்ட  சுற்றறிக்கையில், இந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக்கூடாது என்றும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் பேச வேண்டும் என்றும்தங்களது தாய்மொழியை பேசி னால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் செவிலியர்கள் தங்களுடைய தாய் மொழியில் பேசுவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இருந்தும் பல செவிலியர்கள் பணிபுரிகின்றனர். மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கைக்கு, மற்ற மாநிலங்களை சேர்ந்த செவிலியர்களும் கடுமையான கண்ட னங்களை தெரிவித்திருந்தனர்.  காங்கிரஸ் எம்.பி .ராகுல்காந்தியும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது செவிலியர்கள் மலையாளத்தில் பேசக் கூடாது என்கிற உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப்பெற்றுள்ளது.

;